search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yagasala Pujas"

    • காஞ்சீபுரத்தில் உள்ள அஷ்டபுஜப் பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது.
    • 108 திவ்ய தேசங்களில் 75-வது கோவிலாக உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சீபுரத்தில் உள்ள அஷ்டபுஜப் பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது. 108 திவ்ய தேசங்களில் 75-வது கோவிலாக இது உள்ளது. இங்கு மூலவர் 8 திருக்க ரங்களை உடை யவராகவும், கஜேந்திர மோட்சம் நடந்த சிறப்புக்கு உரிய தலமாகவும் விளங்குகிறது.

     இந்த கோவிலில் கும்பாஷேகம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக யாகசாலை பூஜைகள், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர், உற்வசர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்புத் திருமஞ்சனம், பெருமாள் திருவீதி புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.

    விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல், அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, அறநிலை யத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, உத்திரமேரூர் எம்எல்ஏ.சுந்தர். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் திருப்பணி குழு செயலாளர் சுப்பிரமணியன், கவுன்சிலர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவர் குருபூஜையை முன்னிட்டு தேவர் நினைவிடத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தன.
    • இதில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    பசும்பொன்னில் குருபூஜை விழாவின் 2-வது நாளான இன்று பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா நேற்று (28-ந் தேதி) தொடங்கி நாளை (30-ந் தேதி) வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று ஆன்மீக விழாவாகவும், 2-ம் நாளான இன்று அரசியல் விழாவாகவும், நாளை குரு பூஜை விழாவாகவும் அனுசரிக்கப்படுகிறது.

     முதல் நாளான நேற்று தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலை அலங்கரிக்கப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டி ருந்தது.

    தேவர் நினைவிடத்தில் உள்ள விநாயகர், பாலசுப்பிரமணியர் சன்னதிகளுக்கு 22 ஆண்டுகளுக்கு பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் அரசியல் கட்சியினர் எம்.எல்.ஏ. க்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து தேவர் நினைவிட நிர்வாக பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் பழனி, சத்தியமூர்த்தி, தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் அன்ன தானம் நடந்தது.

    இரவு 8 மணி அள வில் முத்துராமலிங்க தேவரின் ஐம்பொன் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்திற்கு முன்பாக சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஊர்வல மாக வந்தனர்.

    2-ம் நாளான இன்று அரசியல் விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று காலை தேவர் நினைவி டத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபாடு செய்தனர்.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான குருபூஜை விழா நாளை (30-ந் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள், எம். பி., எம். எல் .ஏ.க்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியா தை செலுத்த உள்ள னர்.

    அவர்கள் எந்தெந்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என போலீசார் நேரம் ஒதுக்கீடு செய்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு அஞ்சலி செலுத்த அனு மதிக்கப்படும் என்று போலீசார் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.

    குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×