என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Yellow price continues to fall"
- பரமத்தி வேலூர் தாலு–காவில் பல்வேறு பகுதி–களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டு வந்தது.
- விலை கட்டுபடி ஆகாத விவசாயிகள் தங்கள் மஞ்சள் மூட்டைகளை அங்குள்ள குடோனில் இருப்பு வைக்கின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலு–காவில் சோழசிராமணி, ஜமீன்–இளம்பள்ளி, கொத்த–மங்கலம், ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், வடகரையாத்தூர், பிலிக்கல்பாளையம், கபிலர்மலை, பெரிய–சோளிபாளையம், குரும்ப–லமகாதேவி, சின்னமருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி–களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டு வந்தது.
இங்கு விளையும் மஞ்சள்கள் ஈரோடு பகுதி–களில் உள்ள தனியார் மற்றும் அரசு மஞ்சள் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது மஞ்சளுக்கு நல்ல விலை இல்லாததால் மஞ்சள் பயிரிட்டு வந்த விவசாயிகள் மஞ்சள் பயிரிடுவதை தவிர்த்து கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்கின்றனர். தற்போது மஞ்சள் பயிர் சுமார் 500 ஏக்கர் வரை மட்டுமே சாகுபடி செய்து
வருகின்றனர்.
மஞ்சள் பயிரிட்ட 10-வது மாதத்தில் மஞ்சள் தலையை அறுத்து விடுகின்றனர். பின்னர் சில நாட்கள் கழித்து கூலி ஆட்கள் மூலம் மஞ்சளை வெட்டி எடுக்கின்றனர். பின்னர் விரலி மஞ்சள், கிழங்கு மஞ்சள் என இரண்டாக பிரிக்கின்றனர். அதனை தொடர்ந்து வாகனங்கள் மூலம் ஈரோடு பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு மஞ்சள் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
விலை கட்டுபடி ஆகாத விவசாயிகள் தங்கள் மஞ்சள் மூட்டைகளை அங்குள்ள குடோனில் இருப்பு வைக்கின்றனர். மஞ்சளுக்கு நல்ல விலை வரும்போது விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 100 கிலோ கொண்ட ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்பனையானது.தற்போது 100 கிலோ கொண்ட ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விற்பனையாகிறது.மஞ்சள் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் மஞ்சள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.