என் மலர்
நீங்கள் தேடியது "younman injured"
- நெல்லையை அடுத்த மேலப்பாளையத்தை சேர்ந்தவர் காஜா முகமது.
- எதிர்பாராதவிதமாக 2 பேரின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் காஜா முகமது படுகாயம் அடைந்தார்
நெல்லை:
நெல்லையை அடுத்த மேலப்பாளையத்தை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவரது மகன் காஜா முகமது(வயது 27). இவர் நேற்று மேலப்பாளையம்-அம்பை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் உச்சிமாகாளி(24) தனது சகோதரர் அரிகரசுதன்(12) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
எதிர்பாராதவிதமாக 2 பேரின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் காஜா முகமது படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காஜா முகமது மற்றும் 2 பேரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






