என் மலர்
நீங்கள் தேடியது "கான்பூர்"
- சிறுவன் தனது வகுப்பு தோழியுடன் ஒரு கடையில் கூல்ட்ரிங்க்ஸ் குடித்துள்ளார்.
- சிறுவனை கொலை செய்து விடுவேன் என்றும் பெண்ணின் தந்தை மிரட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வழக்கறிஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 17 வயது சிறுவனை கடத்தி சென்று கொடுமைப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுவனை உயிருடன் காவல்துறையினர் மீட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கல்யாண்பூர் காவல் உதவி ஆணையர் அபிஷேக் பாண்டே, "பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன் மருந்தகம் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். அந்த சிறுவன் தனது வகுப்பு தோழியுடன் ஒரு கடையில் கூலட்ரிங்க்ஸ் குடித்துள்ளார். இதனை பார்த்த பெண்ணின் தந்தை அந்த சிறுவனை தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி சென்று கொடுமைப்படுத்தியுள்ளார்.
அந்த சிறுவனை கொலை செய்து விடுவேன் என்றும் பெண்ணின் தந்தை மிரட்டியுள்ளார். மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
சிறுமியின் தந்தையான வழக்கறிஞர் பிரஜ் நரேன் நிஷாத் மற்றும் அவரது சகோதரர் தேஜ் நரேன் மீது கடத்தல், கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதே சமயம் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகப் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது போஸ்கோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்களின் கடும் அழுத்தத்தின் காரணமாகவே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு டி.எஸ்.பி. கிருபா சங்கர் எடுத்திருந்தார்.
- ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பிக்பூர் சர்க்கிள் அதிகாரியாக இருந்தவர் டி.எஸ்.பி. கிருபா சங்கர். இவர் 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு எடுத்திருந்தார்.
ஆனால் அப்போது அவர் வீட்டிற்கு வராமல், கான்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் உடன் இருந்துள்ளார். அப்போது அவரது சொந்த மற்றும் அலுவலக மொபைல் போனை அவர் சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.
அந்த சமயம் தனது கணவனின் போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்ததால் சந்தேகப்பட்ட அவரது மனைவி தனது கணவனை காணவில்லை என்று உன்னாவ் எஸ்.பி.யிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது டி.எஸ்.பி. கிருபா சங்கரின் மொபைல் நெட்ஒர்க்கை சோதித்த போது கான்பூர் ஓட்டலில் அவரது நெட்ஒர்க் செயலிழந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
உடனே கான்பூர் ஓட்டலுக்கு விரைந்த காவல்துறையினர் ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை கையும் களவுமாக பிடித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உத்தரபிரதேச அரசு டி.எஸ்.பி. கிருபா சங்கரை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.
- மேயரின் உத்தரவு படி புல்டோசர்களில் வந்தவர்கள் அங்கிருந்த 44 இறைச்சி, மீன் கடைகளை இடித்து தள்ளினர்.
- பாஜக மேயரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் கடந்த 26-ம் தேதி சாலையோரம் தனது தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை அங்கிருந்த தெருநாய்கள் திடீரென கடித்தது.
நாய் கடித்ததால் படுகாயமடைந்த 4 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தெருநாய்கள் தொல்லை குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த கான்பூர் மேயர் பிரமிளா பாண்டே, "இறைச்சி விற்பனையாளர்கள் தங்கள் கடைகளில் மீதமாவதை நாய்களுக்கு உணவாக கொடுப்பதே தெருநாய்கள் தொல்லைக்கு காரணம் என்று கூறி அந்த பகுதியில் உள்ள 44 இறைச்சி கடைகளை இடிக்க உத்தரவிட்டார்.
மேயரின் உத்தரவு படி புல்டோசர்களில் வந்தவர்கள் அங்கிருந்த 44 இறைச்சி, மீன் கடைகளை இடித்து தள்ளினர். மேலும், இனி அந்த பகுதியில் இறைச்சி கடைகள் திறக்கக்கூடாது என்றும் மேயர் பிரமிளா பாண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜக மேயரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.