என் மலர்
நீங்கள் தேடியது "சமையல்"
- தவறான வழிகாட்டுதலை உண்மை என்று நம்பி பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
- கட்டுக்கதைகள் பற்றியும், அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.
சமையல் பணியை விரைவாகவும், ருசியாகவும் செய்து முடிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேவேளையில் ஒரு சிலரின் தவறான வழிகாட்டுதலை உண்மை என்று நம்பி அதையே வாடிக்கையாக பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
அவை சமைக்கும் நேரத்தையும், சமைக்கும் பொருட்களையும் விரயமாக்கும் என்பதை அறியாமல் அந்த கட்டுக்கதைகள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். அப்படிப்பட்ட கட்டுக்கதைகள் பற்றியும், அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.
கட்டுக்கதை:
மைக்ரோ ஓவனில் சமைப்பது உணவுப்பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துகள் இழப்புக்கு வழிவகுக்கும்.
உண்மை:
சமைக்கும் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துகளை மைக்ரோ ஓவன் அழித்துவிடும் என்பது பொதுவான கட்டுக்கதையாகும். உண்மையில் மைக்ரோ ஓவன் நீரில் கரையக்கூடிய வைட்டமின்களான சி, ஏ உள்ளிட்ட ஊட்டச்சத்துகளை அதன் தன்மை மாறாமல் தக்கவைத்துக்கொள்ள உதவும். அத்துடன் விரைவாக சமைப்பதற்கு உதவிடும். ஊட்டச்சத்துகள் இழப்பையும் குறைக்கும்.
கட்டுக்கதை:
சமைக்கும்போது எப்போது வேண்டுமானாலும் மசாலாப்பொருட்களை சேர்க்கலாம்.
உண்மை:
இந்த கட்டுக்கதையும் ஏற்புடையதல்ல. அதற்கு மாறாக சமைக்கத் தொடங்கும்போதே மசாலா பொருட்களை சேர்ப்பது சுவையை கூட்டி, சிறந்த பலனை தரும் என்பது சமையல் நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.
அதாவது உப்பு, மஞ்சள், சமையல் பொடி வகைகள் உள்ளிட்ட மசாலா பொருட்களை ஆரம்பத்திலேயே சேர்க்கும்போது அவை சமைக்கும் பொருட்களில் ஆழமாக ஊடுருவும். அதனால் சுவையும், ருசியும் அதிகரிக்கும்.
கட்டுக்கதை:
கியாஸ் அடுப்பில் நெருப்பின் அளவை அதிகரிப்பது வேகமாக சமைத்து முடிப்பதற்கு உதவும்.
உண்மை:
அடுப்பில் இருந்து நெருப்பு அதிகம் வெளிப்படுவது சீரற்ற சமையலுக்குத்தான் வித்திடும். சமைக்கும் பொருள் தீயில் கருகக்கூடும். பாத்திரமும் கடினமாக மாறக்கூடும்.
மிதமான தீயில் சமைப்பது உணவுப்பொருட்களை சமமாக வேகவைக்க உதவும். அவை மென்மையாகவும் இருக்கும். பாத்திரங்களில் ஒட்டுவதும் தவிர்க்கப்படும்.
கட்டுக்கதை:
வேக வைக்கும் பொருட்களை ஒருமுறை புரட்டிப்போட்டாலே போதுமானது.
உண்மை:
இறைச்சி உள்ளிட்ட உணவுப்பொருட்களை அடிக்கடி திருப்பி போடுவது இருபுறமும் சமமாக வேகுவதற்கு உதவும். அவை ஒரே பக்கத்தில் வெந்து கொண்டிருந்தால் அந்த பகுதி கருகிப்போவதற்கு வாய்ப்பிருக்கிறது.
அடிக்கடி திருப்பி போடுவதுதான் சரியானது. குறிப்பாக ஒவ்வொரு 30 விநாடிகளில் இருந்து ஒரு நிமிடத்திற்குள் திருப்பி போடுவது இறைச்சி மென்மையான பதத்தில் வேகுவதற்கும், சுவையாக இருப்பதற்கும் உதவிடும்.
கட்டுக்கதை:
தண்ணீரில் உப்பு சேர்ப்பது வேகமாக நீர் கொதிப்பதற்கு உதவிடும்.
உண்மை:
சமைக்கும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுப்படுத்துவதற்கு முன்பு உப்பு சேர்ப்பது விரைவாக நீர் கொதிப்பதற்கு உதவும் என்ற கருத்து நிலவுகிறது. இதுவும் ஒரு கட்டுக்கதைதான்.
உண்மையில் நீர் கொதிக்கும்போது உப்பு குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும். உண்மையில் உப்பு நீரின் கொதிநிலை நன்னீரை விட சற்று அதிகமாக இருக்கும். ஆனால் சமையல் விஷயத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு ஏதும் இருக்காது. அதனால் தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க வைப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
- சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று.
- அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
சைவ பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் காளானும் ஒன்று. காளான் வைத்து சுவையான காளான் மசாலா, கிரேவி, காளான் 65, காளான் மஞ்சூரியன் என்று பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் காளான் தொக்கு ரெசிபியை பார்க்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
காளான்- 100 கிராம்
பெரிய வெங்காயம் -1
தக்காளி- 1
உப்பு தேவைக்கேற்ப
வறுத்து அரைக்க:
தனியா - 2 தேக்கரண்டி
மிளகு -1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம்- 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்-1
பூண்டு - ஒரு பல்
தாளிக்க:
எண்ணெய்- 2 தேக்கரண்டி
பட்டை - 1 (சிறியது)
லவங்கம் -2
செய்முறை:
முதலில் காளானை நீளமாகவும், வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பின்னர். வறுக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் சேர்க்காமல் வாசம் வரும் வரை வறுத்து, சூடு ஆறியவுடன் மிக்சி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். அத்துடன் நறுக்கிய காளானைப் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு வேக விடவும். பின்னர் வறுத்து அரைத்த கலவையைப்போட்டு 3 நிமிடங்கள் வேக விட்டு இறக்கினால் சுவையான காளான் தொக்கு ரெடி. இது சூடான சாதத்துக்கும் சப்பாத்திக்கும் ஏற்றது.
- டீ உடலுக்குள் சென்றால் என்னென்ன நிகழும் தெரியுமா?
- தினமும் 2 அல்லது 3 கப் டீ பருகலாம். அதற்கு மேல் பருகக்கூடாது.
பால், தேயிலை, சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் டீ உலகெங்கும் பரவலாக பகிரப்படும் பானமாக விளங்குகிறது. டீ பருகிவிட்டுத்தான் அன்றைய நாளை தொடங்கும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அப்படி ருசிக்கப்படும் டீ உடலுக்குள் சென்றால் என்னென்ன நிகழும் தெரியுமா?
''பாலில் இருக்கும் கால்சியம் எலும்புகளை கொஞ்சம் வலுவடைய செய்யும். வயதாகும்போது ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாட்டை தடுக்க இது உதவும். வளர்சிதை மாற்றம் சீராக இயங்க உதவும்.
மேலும் தேநீரில் இருக்கும் காபின் அதிக விழிப்புடனும், கவனத்துடனும் இருக்கச் செய்யும். அத்துடன் தேநீரில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கும் சிறு கவசங்கள் போன்று செயல்படும்.
டீ பருகும் விஷயத்தில் கவனமாக இருக்காவிட்டால் அதில் இருக்கும் தேயிலை உடலில் இரும்பை உறிஞ்சும் திறனை குழப்பிவிடும்'' என்கிறார், பெங்களூருவை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் இப்சிதா சக்கரவர்த்தி.
இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
* தினமும் 2 அல்லது 3 கப் டீ பருகலாம். அதற்கு மேல் கண்டிப்பாக பருகக்கூடாது.
* டீயில் கூடுமானவரை இனிப்பு சேர்ப்பதை தவிர்த்திடுங்கள். அது முடியாதபட்சத்தில் சிறிதளவு இனிப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
* விரும்பிய நேரமெல்லாம் டீ பருகுவதை தவிர்க்க வேண்டும். தாகமாக இருக்கும்போதும் பருகக்கூடாது. நிறைய தண்ணீர் பருகுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
* செரிமான கோளாறு போன்ற வயிறு சார்ந்த பிரச்சினைகளை சந்தித்தால் டீயை தவிர்த்து விடுவது நல்லது. மாற்று பானத்தை தேர்ந்தெடுப்பது சிறப்பானது.
காபினால் பிரச்சினை ஏற்படுமா?
பால் டீயை தினமும் பருகும்போது உடலுக்கு விரைவான ஆற்றலை வழங்கும். சோர்வை போக்கி செய்யும் வேலையில் கவனம் செலுத்த உதவும். ஆனால் டீயில் அதிகப்படியான காபின் இருந்தால் கவலை, அமைதியின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயை உண்டாக்குமா?
டீயில் அதிக சர்க்கரை சேர்ப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீர்குலைத்துவிடும். காலப்போக்கில் டைப்-2 நீரிழிவு அபாயத்தையும் அதிகரிக்க செய்துவிடும். அத்துடன் டீயில் இருக்கும் சர்க்கரை மற்றும் கொழுப்பு கலவையானது வயிற்றை சுற்றி கொழுப்பு சேர்வதற்கு காரணமாகிவிடக்கூடும்.
பாதிப்பை ஏற்படுத்துமா?
சிலருக்கு பாலும், தேநீரும் ஒத்துக்கொள்ளாது. வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் அஜீரணத்துக்கு வழிவகுக்கும். பால் கலந்த டீக்களில் சர்க்கரை மற்றும் கலோரிகள் நிரம்பியிருக்கும். அதிலிருக்கும் அதிகப்படியான இனிப்பு உடல் எடை அதி கரிப்புக்கு வழிவகுக்கும். டீ மட்டுமே பருகிவிட்டு போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளாவிட்டால் நீரிழப்புக்கும் வழிவகுக்கும்.
- ஒரு தடவை செஞ்சு பாருங்க ருசியா இருக்கும்.
- சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
வெண்டைக்காய் துவையல் அப்படின்னு சொன்ன உடனே அது எப்படி இருக்கும்? நல்லாருக்குமா அப்படின்னு ஒரே யோசனையா இருக்கும். ஆனா ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க ருசியா இருக்கும்.
நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க. நம்ம கொள்ளு பருப்புல துவையல், துவரம் பருப்புல துவையல், தேங்காய் துவையல், மல்லி துவையல், புதினா துவையல், அப்படின்னு நிறைய துவையல் செஞ்சிருப்போம். ஆனா இந்த மாதிரி ஒரு தடவை துவையல் செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
இது வெண்டைக்காய் துவையல் அப்படின்னே தெரியாது. ரொம்ப ரொம்ப ருசியா இருக்க கூடிய இந்த வெண்டைக்காய் துவையல சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்- 1/4 கி
கடலை பருப்பு- 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு- 1 டீஸ்பூன்
வர மிளகாய்- 2
பெரிய வெங்காயம்-1
பூண்டு- 3 பல்
புளி- நெல்லிக்காய் அளவு
கடுகு- 1 டீஸ்பூன்
பூண்டு-5
புளி- சிறிதளவு
கறிவேப்பிலை- ஒரு கொத்து
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெண்டைக்காயை வதக்குவதிலேயே முக்கால் பதம் வெந்துவிட வேண்டும் அந்த அளவிற்கு வதக்க வேண்டும்.
பிறகு அதனை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்றாக ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து வெண்டைக்காயையும் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்தால் சுவையான வெண்டைக்காய் துவையல் தயார்.
- பனீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம்.
- பனீரில் கால்சியம் சத்தும் அதிகம்
பசும்பால் அல்லது எருமைப் பாலைக் காய்ச்சி, அதில் எலுமிச்சைப்பழச் சாறோ, வினிகரோ சேர்த்துத் திரியவைத்து பனீர் தயாரிக்கிறார்கள். இது சரியான முறைதான். இதில் எந்த பிரச்சனையும் இல்லை.
பாலைத் திரித்து பனீராக மாறியதும் அதை எவ்வளவு நேரத்துக்கு அழுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அது மிக மென்மையாகவோ, மிதமான மென்மைத்தன்மையுடனோ அல்லது கடினமாகவோ வரும்.
பனீர் புதரச்சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்தது. தவிர அது எந்த மாதிரியான பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் கொழுப்பு அளவும் வேறுபடும்.
சைவ உணவுக்காரர்களுக்கு பாலில் இருந்து பெறப்படும் பனீரின் மூலம் போதுமான புரதச்சத்து கிடைக்கும்.
பனீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம். 100 கிராம் பனீரில் 12.4 கிராம் கார்போஹைட்ரேட் சத்து இருக்கும். பனீரில் கால்சியம் சத்தும் அதிகம் என்பதால் அதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. பனீரில் பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சத்துகளும் இருக்கின்றன.
எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் பனீர் மிகச் சிறந்த உணவு. பனீரை கிரேவி, புலாவ், டிக்கா, புர்ஜி என விதம் விதமாகச் சமைக்க முடியும் என்பதால் குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் செய்து தந்து அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கும் பனீர் நல்லது. இத்தனை நல்ல குணங்களைக் கொண்டிருந்தாலும் பால் அலர்ஜி உள்ளவர்கள் மட்டும் பனீரை தவிர்ப்பது நல்லது.
- அடைக்கு அரைக்கும்போது பருப்பு, அரிசியுடன் கொஞ்சம் புளியும் சேர்த்து அரைத்தால் அதன் ருசியே தனி.
- டீ தயாரிக்கும் பொழுது டீ தூளுடன் ஐந்து புதினாஇலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.
* ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறு வென்றிருக்கும்.
* ஜாங்கிரி செய்யும்போது, பத்து ஜாங்கிரியை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, மேலே தயிர் ஊற்றி, கொஞ்சம் உப்பு போட்டு ஊறவைத்துச் சாப்பிட்டுப் பாருங்களேன். சூப்பர் ருசி!
* தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்.
* மாதுளம்பூவை பாலில் போட்டு கொதிக்க வைத்து பூ வெந்ததும் எடுத்துவிட்டு ஆறியதும் பாலில் சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். இதுபோல தொடர்ந்து எட்டு நாட்களுக்கு அருந்தினால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.
* பருப்பு ரசம் நுரையுடன் பொங்கிவரும் போது கொத்தமல்லித்தழையை உடனே போடாமல் அடுப்பிலிருந்து கீழே இறக்கி, ஐந்து நிமிடம் தாமதித்து ரசத்தில் கிள்ளிப்போட்டால் மல்லி அதன் பசுமை மாறாமல் ரசம் கமகமவென்று வாசனையுடன் இருக்கும்.
* சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அந்த பெருங்காய நீரை உபயோகித்தால் மணம் சீராக அமையும். பெருங்காயமும் குறைவாக செலவாகும்.
* அடைக்கு அரைக்கும்போது பருப்பு, அரிசியுடன் கொஞ்சம் புளியும் சேர்த்து அரைத்தால் அதன் ருசியே தனி.
* டீ தயாரிக்கும் பொழுது டீ தூளுடன் ஐந்து புதினாஇலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.
* ஒரு கப் நல்லெண்ணெய்யை சூடாக்கி, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் ஓமம், இரண்டு வெற்றிலை, சிறிய வில்லை அளவு கற்பூரத்தை பொடித்து சேர்த்து, மறுபடியும் சூடு செய்து வைக்கவும். மறுநாள் இந்த எண்ணெய்யை தலைக்குதேய்த்து 20 நிமிடங்கள் ஊறவிட்டு குளித்தால் ஜலதோஷம் பிடிக்காது, புத்துணர்வும் கிடைக்கும்.
* வெண்ணெய் பாக்கெட்டை இரவு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு வைத்தால், வெண்ணெய் கையிலோ, பேப்பரிலோ ஒட்டாமல் வரும். மேலும் வெண்ணெய் காய்ச்சி இறக்கியதும் அதில் சிறிது வெந்தயத்தைப் போட்டு வைத்தால், நெய் வாசனையாக இருக்கும்.
* இட்லிக்கு அரிசி ஊற வைக்கும்போது அரிசியோடு ஐந்தோ, ஆறோ சோயா பீன்ஸை ஊற வைத்து அரைத்தால் இட்லி மல்லிப்பூப் போல் மிருதுவாக இருக்கும்.
* காய்கறி, பருப்பு, ரசம் இவற்றிற்கு அளவாக நீரைச்சேர்த்து கொதிக்கவிடவும். வெந்தபிறகு நீரை வடித்தால் அதில் உள்ள சத்துக்கள் வீணாகி விடும். அப்படி நீரை வடித்தால் அந்த வடிநீரை குழம்பு, கூட்டு இவற்றில் சேர்த்து விடவும்.
* பால் லேசாகத்திரிந்து விட்டால், அதில் சிறிது சமையல்சோடா சேர்த்து கலந்து உறை ஊற்றவும். கெட்டித்தயிராகி விடும்.
* குளிர்காலத்தில் தயிர் எளிதில் உறையாது. பாலை ஒரு ஹாட்பாக்ஸில் ஊற்றி, உறை ஊற்றி மூடி வைத்து விட்டால் மூன்று மணி நேரத்தில் உறைந்து விடும்.
* பொரித்தெடுத்த ஜாமூனை சூடான சர்க்கரைப்பாகில் போட்டு ஊறவைக்காமல் நன்கு ஆறிய சர்க்கரைப்பாகில் சேர்த்தால் ஜாமூன் விரியாமல், கரையாமல், உடையாமல் சுவையாக இருக்கும்.
* தேன்குழல், சீடை ஆகியவற்றைச்செய்யும் போது மாவை வெந்நீர் ஊற்றிப்பிசைந்தால் எத்தனை நாளானாலும் நமத்துப் போகாது.
* வெள்ளரிக்காய் சூப் தயாரிக்கும்போது வெள்ளரிக்காயை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துச்சேர்த்தால் நன்றாக இருக்கும்.
* வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களில் மில்க் ஷேக் செய்யும்போது கொஞ்சம் வெண்ணெய் போட்டு செய்தால் மில்க் ஷேக் நன்றாக நுரைத்துக் கொண்டு வரும்.
- சமைத்துக் கொண்டே செல்போன் பயன்படுத்திய போது இந்த விபத்து நடந்துள்ளது.
- படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
மத்திய பிரதேசத்தில் சூடான எண்ணெயில் செல்போன் தவறி விழுந்து பேட்டரி வெடித்து சிதறியதில் சந்திர பிரகாஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சமைத்துக் கொண்டே செல்போன் பயன்படுத்திய போது இந்த விபத்து நடந்துள்ளது.
செல்போனின் பேட்டரி வெடித்ததில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பாதி வழியிலேயே உயிர் பிரிந்துள்ளது.
ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததே உயிரிழப்புக்கு காரணம் என்று உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
உயிரிழந்த சந்திர பிரகாஷ்-க்கு திருமணமாகி 14 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பால்பன் ரெசிபியை நீங்க கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.
- ஒரு தடவை வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
தீபாவளிக்கு எல்லார் வீட்லயும் ஏதாவது ஒரு பலகாரம் செய்ய ஆரம்பிச்சு இருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பர் டேஸ்டான பால்பன் தீபாவளி பலகாரமா பாக்கப் போறோம். இந்த பால்பன் திண்டுக்கல் மாவட்டத்தில் ரொம்ப ரொம்ப ஃபேமசான ஒரு ரெசிபி. இந்த பால்பன் ரெசிபியை நீங்க கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா ஒரு தடவை வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் கடையில வாங்கவே மாட்டீங்க வீட்லயே செஞ்சு சாப்பிடுவீங்க.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு- 1 கப்
சர்க்கரை- 1 கப்
ஏலக்காய் தூள்- 1 டீஸ்பூன்
தயிர்- 1/4 கப்
நெய்- 2 டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
பேக்கிங் சோடா- 1 டீஸ்பூன்
எண்ணெய்-தேவையான அளவு
செய்முறை:
முக்கால் கப் சர்க்கரையை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் மைதா மாவு, ஏலக்காய் தூள், தயிர், பேக்கிங் சோடா சிறிதளவு மற்றும் உப்பு நெய் சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல கொஞ்சம் இலக்கமாக பிசைந்து கொள்ள வேண்டும்.
கடாயில் மீதி உள்ள சர்க்கரை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக சேர்த்து பொரித்து எடுத்து சர்க்கரைப்பாகில் சேர்த்தால் சுவையான பால்பன் தயார்.
- இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது.
- கும்மாயம் அருமையான ருசியில் இருக்கும்.
இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பெரும்பாலும் பண்டிகை தினங்களில் மட்டுமே இந்த கும்மாயம் செய்யப்படும். இந்த கும்மாயம் அருமையான ருசியில் இருக்கும். கும்மாயம் ஒரு பாரம்பரிய செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு உணவு.
கும்மாயம் என்பதற்கு குழைய சமைத்த பருப்பி என்று பொருள். உளுந்து, பாசிப் பருப்பு, நெய், பனங்கருப்பட்டி, ஆகியவை சேர்த்து வேகவைத்து செய்யப்படும் இனிப்பு பலகாரம் ஆகும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையான முறையில் செய்துவிடலாம். இந்த தீபாவளிக்கு நீங்களும் உங்களது வீட்டில் கும்மாயம் செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
உளுந்து- 100 கிராம்
பச்சரிசி- 50 கிராம்
பாசிப்பருப்பு- 25 கிராம்
நெய்- 150 கிராம்
வெல்லம் அல்லது கருப்பட்டி- 150 கிராம்
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பு, உளுந்து, பச்சரிசி ஆகியவற்றை தனித்தனியாக கடாயில் இளம் வறுப்பாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்து வைத்துள்ள ஒவ்வொன்றையும் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். கொதித்தவுடன் அதனை வடிகட்டி பாகு காய்ச்ச வேண்டும்.
நெய்யில் வறுத்து வைத்துள்ள மாவை தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கடைத்துக்கொள்ள வேண்டும். கரைத்து வைத்திருக்கும் மாவை கொதிக்கும் வெல்லப்பாகில் சேர்க்க வேண்டும்.
கிண்டும் போது கட்டியாகாமல் இருக்க இடை இடையே நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாவு நன்றாக வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்க வேண்டும்.
சுவையான கும்மாயம் ரெடி. வாயில் வைத்தவுடன் கரைந்து ஓடிவிடும். இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் புடிக்கும்.
- சாமை அரிசி மலச்சிக்கலை போக்க வல்லது.
- சாமை உடல் வெப்பத்தை சமநிலைபடுத்தி உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
சாமை அரிசியில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளது, இது சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிக்கிறது.
சாமை அரிசி மலச்சிக்கலை போக்க வல்லது. சாமை அரிசி நமது உடல் வெப்பத்தை சமநிலைபடுத்தி உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
இந்த சாமை அரிசியை பயன்படுத்தி ஒரு இனிப்பான ரெசிப்பிதான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். சாமை அரிசி, கல்கண்டு வைத்து சாமை கல்கண்டு சாதம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி 1 கப்
பயத்தம் பருப்பு - ½கப்
நெய் - 2 ஸ்பூன்
கல்கண்டு - முக்கால் கப்
முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை- 50 கிராம்
தண்ணீர் 4 கப்
செய்முறை:
பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்க வேண்டும். சாமை அரிசியையும், பயத்தம் பருப்பையும் தண்ணீரில் களைந்து, குக்கரில் போட்டு 6 விசில் வரும் வரை வேக விடவும்.
கல்கண்டை மிக்சியில் பொடியாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் நெய் ஊற்றி முந்திரிப் பருப்பு, உலர் திராட்சையை வறுக்கவும்.
வேக வைத்த சாமை அரிசியில் தேவையான அளவு நெய், கல்கண்டு தூள், முந்திரிப் பருப்பு. திராட்சை சேர்த்து கிளறி, சூடாக பரிமாறவும்.
குறிப்பு: தண்ணீருக்குப் பதில் பால் சேர்த்து வேகவிட்டால் இன்னும் சுவை கூடும்.
- தீபாவளி என்றாலே நமது நினைவுக்கு வருவது புத்தாடையும், பட்டாசும் தான்.
- அவலில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
தீபாவளி என்றாலே நமது நினைவுக்கு வருவது புத்தாடையும், பட்டாசும், நொறுக்கு தீனியும், இனிப்புகளும் தான். தீபாவளி வர ஒரு வாரம் இருக்கும் போதே நமது வீடுகளில் பலகாரங்கள் செய்ய துவங்கி விடுவார்கள். அதிரசம், லட்டு, குளோப் ஜாமும், வடை, அப்பம், முறுக்கு, ஜாங்கிரி என இனிப்புக்கு பஞ்சமே இல்லாமல் அடுக்கி வைப்பார்கள்.
இந்த முறை அவலை வைத்து சுவையான அவல் லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 1/4 கப்
பொட்டு கடலை - 1/4 கப்
அவல் - 1 கப் (250 மி.லி கப்)
நெய்- தேவையான அளவு
முந்திரி- 10
திராட்சை- 10
வெல்லம் - 3/4 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் கடாயில் நிலக்கடலையை போட்டு இரண்டு நிமிடம் வறுத்து, பொட்டு கடலை சேர்த்து கலந்து விடவும். பின்னர் அவல் சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்.
இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஒரு தட்டில் எடுத்து போடவும்.
பிறகு அதே கடாயில் சிறிது நெய், முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
வெல்லப் பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து வெல்லம் உருகியதும் அடுப்பை அணைத்து தனியாக வைக்கவும்.
வறுத்த பொருட்களை மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும்.
பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெல்லப் பாகு, துருவிய தேங்காய், வேர்க்கடலை அவல் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
கலவையை நன்கு கலந்து, வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் இரண்டு மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.
பிறகு அடுப்பை அணைத்து விட்டு கலவையை ஒரு தட்டில் வைத்து முழுமையாக ஆற வைக்கவும்.
கலவை ஆறிய பிறகு அதில் சிறிது எடுத்து லட்டுவாக பிடித்தால் அவல் லட்டு தயார்.
அவலில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது உங்களை முழுதாக உணரவும் உங்கள் கலோரி உட்கொள்ளலை குறைக்கவும் உதவும்.
போஹா ஜீரணிக்க எளிதானது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கவும், வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் உதவும்.
- சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கும் இது அருமருந்தாகும்.
- வாரம் ஒருமுறை சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.
தீபாவளி விருந்தாலும், பலகாரங்களாலும் ஏற்படும் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறு, திடீர் ஏப்பங்கள், வாந்தி, வயிற்று வலி, அசதி போன்றவற்றுக்கு லேகியம் நிவாரணம் கொடுக்கும். கூடவே பனிக்காலத்தில் வரக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கும் இது அருமருந்தாகும்.
தீபாவளி தினத்தில் மட்டுமல்லாமல், மற்ற நேரங்களிலும் இந்த லேகியத்தை சாப்பிடலாம். இது செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். பொதுவாகவே நாம் உண்ணும் உணவுகளில் கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது. இந்த லேகியத்தை வாரம் ஒருமுறை சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.
தேவையான பொருள்கள்:
சுக்கு - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
திப்பிலி - 50 கிராம்
சதகுப்பை - 30கிராம்
சிறுநாகப்பூ - 50 கிராம்
வாய்விடங்கம் - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
லவங்கப்பட்டை - 50 கிராம்
கோரைக் கிழங்கு - 50 கிராம்
கொத்தமல்லி - 30 கிராம்
சித்தரத்தை - 30 கிராம்
ஓமம் - 30 கிராம்
அதிமதுரம் - 20 கிராம்
கிராம்பு - 20 கிராம்
வெல்லம்- 300 கிராம்
தேன் - 100 கிராம்
நெய் - 100 மில்லி
செய்முறை:
* அடுப்பில் பாத்திரம் வைத்து, மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக சிறு தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* வறுத்து வைத்த ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக நன்றாக மிக்சி ஜாரில் போட்டு அரைத்து, சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* லேகியத்திற்கு வேண்டிய அளவு வெல்லத்தை எடுத்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து பாகு காய்ச்ச வேண்ம்.
* பாகு கம்பி பதம் வந்தவுடன் அடுப்பில் இருந்து எடுக்காமல் தீயை கொஞ்சம் குறைத்து வைத்து, அரைத்து வைத்திருக்கும் அனைத்து பொடிகளை ஒன்றன் பின் ஒன்றாக சிறிது சிறிதாக கெட்டி ஆகாமல் சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
* பின்னர் வாணலியை இறக்கி வைத்து நெய் விட்டு நன்றாகக் கிளறி சிறிது ஆறிய பின் சிறிது சிறிதாக தேன் விட்டுக் கிளறி வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* ஆறிய பின்னர் வயதுக்கு ஏற்றவாறு 3 - 12 வயது வரை 5 கிராம் காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு எடுத்து சாப்பிடலாம். 13 வயதுக்கு மேற்பட்டோர் 10 கிராம் அளவு எடுத்து காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம்.
-சித்த மருத்துவர் காமராஜ்..