என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை சூப்பர் கிங்ஸ்"

    • ஏலம் முடிந்த பிறகும் நான் அழுதுகொண்டே இருந்தேன்.
    • என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் நடனமாடினார்கள்.

    ஐபிஎல் தொடரின் 19-வது சீசனுக்கான மினி ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா (அன்கேப்ட் வீரர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரை சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது.

    கார்த்திக் சர்மாவை வாங்க ஆரம்பத்தில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் ஆர்வம் காட்டின. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தீவிரமாகப் களமிறங்கியது. கொல்கத்தா அவரை வாங்கிவிடும் என்று நினைத்த நேரத்தில், சிஎஸ்கே உள்ளே புகுந்து விலையை எகிற வைத்தது. 10 கோடியைத் தாண்டியதும் ஐதராபாத் (SRH) அணி போட்டிக்கு வந்தது. ஆனால், விடாப்பிடியாக நின்ற சிஎஸ்கே, இறுதியில் ரூ.14.2 கோடிக்கு கார்த்திக் சர்மாவைத் தட்டித் தூக்கியது.

    ஏலத்தை கார்த்திக் சர்மா, நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். தனக்கான ஏலம் தொடங்கிய விதம் குறித்தும், அது முடிந்த பிறகு தனது மனநிலை குறித்தும் அவர் உருக்கமாகப் பேசியுள்ளார். அதில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஆனால் அந்தத் தருணத்தில் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. ஏலம் தொடங்கியபோது, 'என்னை யாரும் எடுக்க மாட்டார்களோ?' என்று பயந்தேன். ஆனால் ஏலம் சூடுபிடித்துத் தொகை எகிறத் தொடங்கியதும், என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது.

    ஏலம் முடிந்த பிறகும் நான் அழுதுகொண்டே இருந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் நடனமாடினார்கள். ஆனால் நானோ அழுதுகொண்டிருந்தேன். அந்த அளவுக்கு நான் மகிழ்ச்சியாக இருந்தேன். என் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

    முதல்முறையாக நான் மஹி பாய் (தோனி) உடன் விளையாடப் போகிறேன். அவரிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ளலாம் என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். முதன்முறையாக ஏலத்தில் எடுக்கப்பட்டதே இவ்வளவு பெரிய தொகைக்கு என்பது நம்பமுடியாத ஒன்று என கார்த்திக் கூறினார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவதில் மகிழ்ச்சி.
    • பேட்டிங்கில் பின்வரிசையில் ஆடுவது எளிதல்ல.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் பிரசாந்த் வீர் என்ற (அன்கேப்ட் வீரர்) ஆல் ரவுண்டர் வீரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரின் ஆரம்ப விலை ரூ.30 லட்சம் ஆகும். ஜடேஜாவிற்கு மாற்றாக பிரசாந்த் வீர் இருப்பர் என்று சி.எஸ்.கே அணி எதிர்பார்த்து இந்த விலையை கொடுத்துள்ளது.

    இதனையடுத்து ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா (அன்கேப்ட் வீரர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரையும் சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன 2 அன்கேப்ட் வீரர் வீரர்களையும் சி.எஸ்.கே அணி வாங்கியுள்ளது.

    இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவதில் மகிழ்ச்சி என பிரசாந்த் வீர் கூறியுள்ளார். இது குறித்து பிரஷாந்த் வீர் கூறுகையில், 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவதில் மகிழ்ச்சி. ஏனெனில் அங்கு டோனி இருக்கிறார். பேட்டிங்கில் பின்வரிசையில் ஆடுவது எளிதல்ல. அதை சிறப்பாக செய்வது தான் அவரது ஸ்பெஷல். அவரிடம் இருந்து முடிந்த வரை நிறைய கற்றுக்கொள்வேன். அவரிடம் இருந்து 4-5 சதவீதம் கற்றுக்கொண்டாலும் கூட எனக்கு பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.

    • சர்பராஸ் கானை ரூ. 75 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.
    • கடந்த 2 சீசன்களாக அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இதில், 77 வீரர்களை அணிகள் வாங்கின. அதில் சர்பராஸ் கானை ரூ. 75 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

    இந்நிலையில், மினி ஏலத்தில் தன்னை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சர்பராஸ் கான் சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் எனக்கு புதிய வாழ்க்கை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.

    மேலும் அவரது ஸ்டோரியில் நடிகர் நானி நடித்த ஜெர்சி படத்தில் உள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் அணிக்குத் தேர்வான மகிழ்ச்சியை வெளிப்படுத்த, தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரயில் நிலையத்திற்குச் சென்று, வரும் ரயிலின் சத்தத்திற்கு இணையாக தனது சந்தோஷத்தை கத்தி நானி வெளிப்படுத்துவார்.

    ஐபிஎல் தொடரில் 2015 முதல் 2023 வரை பல்வேறு அணிகளுக்காக சர்ப்ராஸ் கான் விளையாடியுள்ளார். கடந்த 2 சீசன்களாக அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
    • ஜடேஜாவிற்கு மாற்றாக பிரசாந்த் வீர் இருப்பர் என்று சி.எஸ்.கே அணி எதிர்பார்க்கிறது

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர். இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், பிரசாந்த் வீர் என்ற UNCAPPED ஆல் ரவுண்டர் வீரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் போனார், இவரின் ஆரம்ப விலை ரூ.30 லட்சம் ஆகும். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன UNCAPPED வீரர் என்ற சாதனையை பிரசாந்த் வீர் படைத்தார். ஜடேஜாவிற்கு மாற்றாக பிரசாந்த் வீர் இருப்பர் என்று சி.எஸ்.கே அணி எதிர்பார்த்து இந்த விலையை கொடுத்துள்ளது. 

    அடுத்ததாக ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா (அன்கேப்ட் வீரர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரையும் சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன 2 UNCAPPED வீரர்களையும் சி.எஸ்.கே அணி வாங்கியுள்ளது. 

    • சாம் கரணை தமிழ்நாட்டு ரசிகர்கள் சுட்டி குழந்தை என்று அன்போடு அழைத்து வந்தனர்.
    • அடுத்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக சாம் கரண் விளையாடவுள்ளார்

    இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் வீரரான சாம் கரண் தனது நீண்ட நாள் காதலி இசபெல்லா கிரேஸிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ப்ரொபோஸ் செய்தார். இசபெல்லாவும் இதனை ஏற்றுக்கொண்டார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

    ப்ரொபோஸ் செய்த புகைப்படங்களை சாம் கரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரண் விளையாடிய காலத்தில் அவரை தமிழ்நாட்டு ரசிகர்கள் சுட்டி குழந்தை என்று அன்போடு அழைத்து வந்தனர். இந்நிலையில் டிரேட் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை வாங்கியதற்காக ஜடேஜா மற்றும் சாம் கரணை ராஜஸ்தான் அணிக்கு சென்னை வழங்கியுள்ளது.

    இதனால் அடுத்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக சாம் கரண் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிரேடிங் முறையில் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியது.
    • அவருக்கு பதிலாக ஜடேஜா, சாம் கரனை விட்டுக்கொடுத்தது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

    மேலும் பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தக பரிமாற்றம் (டிரேடிங்) மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கி இருக்கிறது. அதற்கு பதிலாக அந்த அணிக்கு ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா (ரூ.14 கோடி), சாம் கர்ரன் (ரூ.2.4 கோடி) ஆகியோரை விட்டுக்கொடுத்துள்ளது.

    இந்நிலையில் சிஎஸ்கேவில் தோனியுடன் நேரம் செலவிடப் போவதை யோசிச்சாலே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

    மேலும் "தோனியுடன் உரையாட, உணவு சாப்பிட, பயிற்சி மேற்கொள்ள மிகவும் ஆவலாக நான் காத்திருக்கிறேன். யோசிச்சாலே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு எனவும் கூறினார்.

    • கடல் போன்ற மஞ்சள் படை தோனியின் பெயரை உச்சரிக்கும்.
    • எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.

    அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் சென்னை மைதானத்தில் தோனி நுழைந்தால் மைதானமே அதிரும் என்று இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோ ரூட், "ஐபிஎல் போட்டியின் போது, சென்னையில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய வரும்போது, மைதானம் குலுங்குவது போலவும், அதிர்வது போலவும் உணர்வீர்கள். அரங்கமே அதிர்வுறும். கடல் போன்ற மஞ்சள் படை அவரது பெயரை உச்சரிக்கும். எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது. என்ன ஒரு அனுபவம் அது" என்று தெரிவித்தார்.

    • தோனி மனைவி சாக்ஷி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
    • தோனி இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் இந்திய அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். மேலும் சிஎஸ்கே மூலமும் பல ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார்.

    அவர் இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்குவார் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் எம்.எஸ். தோனி மனைவி சாக்ஷி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு தோனி கேக் கொடுக்கும் புகைப்படத்தை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து நம் தலைவன் தலைவிக்கு பிறந்தநாள் விசில்கள் என தலைப்பிட்டுள்ளது. 

    • கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது இடத்தை பிடித்தது.
    • கடந்த சீசன் முடிந்தவுடன் சேப்பாக்கத்தை புதுபிக்க நிர்வாகம் முடிவு செய்தது.

    ஐபிஎல் தொடரின் மினி ஏலம் அடுத்த மாதம் 15-ந் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்தல், கழற்றி விடுதல் மற்றும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றியுள்ளனர்.

    இதனால் மினி ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிக்கு இடம் பெற உள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து விட்டு அந்த அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்கியுள்ளது.

    மேலும் சென்னை அணியில் இருந்து பல வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர். இதனால் எந்த வீரரை சென்னை அணி ஏலத்தில் எடுக்கவுள்ளது என்ற ஆவல் ரசிகர்ளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை அணியின் இத்தனை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக போன சீசன் அமைந்தது ஆகும். கடந்த சீசனில் சென்னை அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. குறிப்பாக சென்னையில் விளையாடி நிறைய போட்டிகள் தோல்வியடைந்தது.

    இதனால் சிஎஸ்கே அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தை புதுபிக்க நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ஐபிஎல் சீசன் முடிந்த உடனே ஜூன் மாதம் இதற்கான வேலையை அணி நிர்வாகம் தொடங்கியது. இதனால் இந்த ஆண்டு இறுதி வரை சர்வதேச போட்டிகள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த மைதானத்தை புதுபிக்க முதன்மை காரணம், உலகத் தரம் வாய்ந்த வடிகால் அமைப்பை நிறுவுதல், அவுட்ஃபீல்டை மாற்றுதல், பிட்ச் மற்றும் புல் மேற்பரப்பை மேம்படுத்துதல் ஆகும். இதனால் மழை பெய்த பிறகு விரைவாக விளையாட்டைத் தொடர அனுமதிக்கும் மற்றும் உயர்தர போட்டிகளை உறுதிப்படுத்தவும் ஆகும்.

    இந்நிலையில் இந்த மைதானத்தை புதுபிக்க நடந்த வேலைகள் குறித்த வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியன்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் வேலை தொடங்கியதில் இருந்து மைதானம் ரெடியாகும் வரை உள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது.
    • 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.

    அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    இந்நிலையில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதை குறிப்பிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    கூலி படத்தின் கூலி பவர் ஹவுஸ் பாடலை பயன்படுத்தி சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் தல தோனிக்கு இந்த வீடியோவை சி.எஸ்.கே. அணி எடிட் செய்துள்ளது. 

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது.
    • 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.

    அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    மேலும், ஐபிஎல் 2026-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    • சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் முறையில் வாங்கியுள்ளது.
    • ஜடேஜா, சாம் கரன் ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்றுக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.

    அந்த வகையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். அவரை டிரேட் முறையில் சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டு மன்மதனே வாராய்' பாடலுடன் சஞ்சு சாம்சனின் வீடியோவை பகிர்ந்த அவரது மனைவி சாருலதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    ×