என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கணினி
இந்தியாவில் 5ஜி சேவை கட்டணம் அதிகமாக இருக்குமா? - மத்திய மந்திரி விளக்கம்
- 5ஜி சேவை முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 20 முதல் 25 முக்கிய நகரங்களில் வழங்கப்பட உள்ளது.
- உலக சந்தைகளைவிட இந்தியாவில் 5ஜி டேட்டா சேவை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.
5ஜி தொலைதொடர்பு சேவை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்தியாவில் தற்போது வரை, 4ஜி அலைக்கற்றை மூலம் இணைய சேவை மற்றும் தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2022 இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சரவை அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியது. வருகிற ஜூலை மாதத்திற்குள் இந்த ஏலத்தை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 20 ஆண்டு கால அளவிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்து 5ஜி சேவையை வழங்க முடியும்.
இந்நிலையில், 5ஜி சேவை முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 20 முதல் 25 முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும் என மத்திய தகவல் தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அதில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் முதற்கட்டமாக பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், லக்னோ, பூனே, சென்னை, காந்திநகர், ஜாம் நகர், மும்பை, அகமதாபாத், சண்டீகர் உள்பட 13 நகரங்களுக்கு வழங்கப்படும் என்றும் பின்னர் இதர நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். உலக சந்தைகளைவிட இந்தியாவில் 5ஜி டேட்டா சேவை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். 4ஜி டேட்டா பேக்குகளுக்கு இணையாகவே 5ஜி டேட்டா பேக்குகளின் விலையும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.