search icon
என் மலர்tooltip icon

    கணினி

    32-இன்ச் டிஸ்ப்ளேவுடன் ஐமேக் டெஸ்டிங் துவக்கம் - ஆப்பிள் புது திட்டம்
    X

    32-இன்ச் டிஸ்ப்ளேவுடன் ஐமேக் டெஸ்டிங் துவக்கம் - ஆப்பிள் புது திட்டம்

    • புதிய ஐமேக் டிஸ்ப்ளே அளவு 32 இன்ச் வரை இருக்கும் என்று தகவல்.
    • ஆப்பிள் நிறுவனத்தின் ப்ரோ டிஸ்ப்ளே XDR விலை 4 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் அளவில் பெரிய ஐமேக் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கிட்டத்தட்ட 32 இன்ச் அளவு கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    புளூம்பர்க்-இன் மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இந்த ஐமேக் மாடல்கள் அதன் ஆரம்பக்கட்ட பணிகளில் உள்ளதாகவும், இவை 2024 அல்லது 2025 வரை அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்றும் அவர் தெரிவித்தார்.

    முந்தைய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 30 இன்ச் வரையிலான டிஸ்ப்ளே கொண்ட பெரிய ஐமேக் மாடல்களை உருவாக்கி வருவதாக தெரிவித்து இருந்தார். ஆப்பிள் நிறுவனத்தின் டாப் என்ட் ப்ரோ டிஸ்ப்ளே XDR மானிட்டர் போன்றே, இதன் டிஸ்ப்ளே அளவு 32 இன்ச் வரை இருக்கும் என்று தற்போதைய தகவல்களில் அவர் தெரிவித்துள்ளார்.

    2019 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ப்ரோ டிஸ்ப்ளே XDR விலை 4 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த டிஸ்ப்ளே அதிகபட்சம் ரெட்டினா தரம் கொண்ட தரவுகளை 6K ரெசல்யுஷனில் ஒளிபரப்பும் திறன் கொண்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் இன்டெல் சார்ந்து இயங்கிய 27 இன்ச் மேக் மற்றும் ஐமேக் ப்ரோ மாடல்கள் விற்பனை சமீபத்தில் நிறுவத்தப்பட்டது. மேலும் பெரிய ஸ்கிரீன் கொண்ட ஐமேக் மாடல்களை அறிமுகம் செய்வது பற்றியும் ஆப்பிள் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    Next Story
    ×