search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    விற்பனையில் புது மைல்கல் எட்டிய ரெட்மி நோட் சீரிஸ் - எத்தனை கோடி தெரியுமா?
    X

    விற்பனையில் புது மைல்கல் எட்டிய ரெட்மி நோட் சீரிஸ் - எத்தனை கோடி தெரியுமா?

    • இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக சியோமி விளங்குகிறது.
    • இந்தியாவில் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை சியோமி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்கி டிசம்பர் 01 ஆம் தேதியுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு செய்தது. 2014 ஆண்டு வாக்கில் ரெட்மி நோட் 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டதில் இருந்து இதுவரை 72 கோடி ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இருப்பதாக சியோமி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    "ரெட்மி நோட் பயணத்தில் உடனிருக்கும் இந்தியா மற்றும் சியோமி பிரியர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் இதை எங்களால் செய்திருக்க முடியாது," என ரெட்மி இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.

    "ஒவ்வொரு புதிய ரெட்மி நோட் சீரிஸ் அறிமுகத்தின் போதும், இந்த பிரிவில் அனைவரும் திரும்பி பார்க்கச் செய்யும் அப்கிரேடுகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த எட்டு ஆண்டுகளாக நோட் சீரிஸ் நாங்கள் அறிமுகம் செய்த மிகவும் தலைசிறந்த தொழில்நுட்பமாக கேமரா இருக்கிறது."

    "பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் 48MP சென்சாரை நாங்கள் தான் முதலில் கொண்டு வந்தோம். இதே வரிசையில் 64MP மற்றும் 108MP என மிட்-பிரீமியம் பிரிவின் கேமராக்கள் தொடர்ந்து MP கணக்கை கூட்டுவதில் நாங்கள் முன்னணியில் இருந்து வருகிறோம்," என்று சியோமி இந்தியா மூத்த விளம்பர பிரிவு அலுவலர், அனுஜ் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×