search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    திடீரென வெடித்துச் சிதறிய ஸ்மார்ட்போன் - அருகில் உறங்கிக் கொண்டிருந்த பெண் உயிரிழப்பு!
    X

    திடீரென வெடித்துச் சிதறிய ஸ்மார்ட்போன் - அருகில் உறங்கிக் கொண்டிருந்த பெண் உயிரிழப்பு!

    • ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது அவ்வப்போது பல பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டே தான் வருகிறது.
    • சமீபத்தில் ஸ்மார்ட்போன் மாடல் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதால் பரபரப்பு.

    ரெட்மி 6A ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதால் ஸ்மார்ட்போனில் பலத்த சேதங்கள் ஏற்பட்டதாக யூடியூபர் ஒருவர் தனது ட்விட்டரில் தகவல் தெரிவித்து இருந்தார். சில சீன பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் வெடித்துச் சிதறுவது அவ்வப்போது நடைபெறுவது வழக்கமாகி விட்டது. எனினும், இதன் மூலம் பாதிப்பு பெரியதாகும் போது சில சம்பவங்கள் வைரலாகின்றன.

    சமீபத்திய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யூடியூபரின் உறவினர் தனது ஸ்மார்ட்போனை தலையணை அருகில் வைத்துவிட்டு உறங்கி இருக்கிறார். அவர் உறங்கிய சில நிமிடங்களில் ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறி இருக்கிறது. இந்த சம்பவம் டெல்லி என்சிஆர் பகுதியில் ஏற்பட்டது. ஸ்மார்ட்போன் வெடித்து உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    "ரெட்மி 6A ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வந்த எனது உறவினர் நேற்று இரவு உயிரிழந்து விட்டார். அவர் தனது ஸ்மார்ட்போனை தனது முகத்தின் அருகில் உள்ள தலையணையில் வைத்து இருந்தார். அவர் உறங்கி கொண்டிருந்த போது ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியது. இது எங்களுக்கு மோசமான நேரம். இந்த நேரத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது பிராண்டின் பொறுப்பு," என யூடியூபர் ட்விட்டரில் தகவல் தெரிவித்து இருக்கிறார். இத்துடன் தனது பதிவில் ட்விட்டர் இந்தியா, மனு குமார் ஜெயின் ஆகியோரை டேக் செய்திருந்தார்.

    பேட்டரி வெடித்ததால் ஸ்மார்ட்போன் முழுமையாக எரிந்தது. இதன் காரணமாக அதில் இருந்த டிஸ்ப்ளே உடைந்து பின்புற பேனல், முழுமையாக சேதமடைந்து விட்டது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதை உணர முடியும். இத்துடன் ட்விட்டரில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் உயிரிழந்த பெண் படுத்திருந்த பகுதி முழுக்க இரத்தத்தை காண முடிகிறது.

    ஸ்மார்ட்போன் வெடித்த சம்பவம் உயிரிழப்பை ஏற்படுத்தி இருப்பதை அடுத்து சந்தையில் சியோமி நிறுவனம் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. மேலும் உயிரிழப்பு ஏற்பட்டதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் சியோமி நிறுவனம் தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Photo Courtesy: MD Talk

    Next Story
    ×