என் மலர்
புதிய கேஜெட்டுகள்
காலிங் வசதியுடன் அறிமுகமான போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச்
- போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் IP68 தர ஸ்வெட் ரெசிஸ்டணட் வசதி உள்ளது.
- இதில் ஹார்ட் ரேட் சென்சார், SpO2 சென்சார் மற்றும் ஸ்லீப் டிராக்கர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. போட் வேவ் லீப் கால் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாசட்ச் குறைந்த விலையில், அதிக அம்சங்களை கொண்டிருக்கிறது.
புதிய போட் வேவ் லீப் கால் மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட டயல், 1.83 இன்ச் டிஸ்ப்ளே, HD ரெசல்யூஷன், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், IP68 தர டஸ்ட், ஸ்வெட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் வலதுபுறம் கரவுன் போன்ற பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.
உடல்நல அம்சங்களை பொருத்தவரை போட் வேவ் லீப் கால் மாடலில் ஹார்ட் ரேட் மாணிட்டர், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் தினசரி ஆக்டிவிட்டி டிராக்கர், சுவாச பயிற்சி போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.
போட் வேவ் லீப் கால் மாடலில் பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் வசதி உள்ளது. பயனர்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் அதிகபட்சம் 10 காண்டாக்ட்களை சேமிக்க முடியும். இத்துடன் டயல் பேட் உள்ளது. இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட், சிரி போன்ற அம்சங்களும் உள்ளன. இவைதவிர மியூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல், வானிலை அப்டேட்கள், ஃபைண்ட் மை போன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ப்ளூடூத் காலிங் பயன்படுத்தும் பட்சத்தில் மூன்று நாட்களுக்கான பேட்டரி பேக்கப் கிடைக்கிறது. இது 60 நாட்களுக்கு ஸ்டாண்ட்பை வழங்குகிறது.
புதிய போட் வேவ் லீப் கால் மாடல் பிளாக், புளூ மற்றும் பின்க் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் வலைத்தளத்தில் மார்ச் 20 ஆம் தேதி துவங்க இருக்கிறது.