search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    வேற லெவல் அம்சங்களுடன் உருவாகும் பிக்சல் 7a
    X

    வேற லெவல் அம்சங்களுடன் உருவாகும் பிக்சல் 7a

    • கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 7a ஸ்மார்ட்போன் பற்றிய அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • அந்த வகையில் பிக்சல் 7a மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகளவு மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    கூகுள் நிறுவனம் பிக்சல் 7a ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கி விட்டது. அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 7a மாடல் "லின்க்ஸ் (lynx)" எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

    புதிய பிக்சல் 7a அதன் முந்தைய மாடல்- பிக்சல் 6a-வை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி பிக்சல் 7a மாடல் அதிக ரிப்ரெஷ் ரேட், புதிய டூயல் பிரைமரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. பிக்சல் 7a மாடலில் சாம்சங் பேனல், FHD மற்றும் 1080 பிக்சல் ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட், டூயல் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இத்துடன் கூகுள் டென்சார் சிப், குவால்காம் வைபை ப்ளூடூத் வழங்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் பிக்சல் 6a மாடலில் அதிக மேம்பட்ட அம்சங்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பிக்சல் 6a மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட சாம்சங் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தாலும், ரிப்ரெஷ் ரேட் அளவு 60Hz ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், புதிய பிக்சல் 7a மாடலில் இதுபோன்ற சமரசம் செய்யப்படாது என்றே தெரிகிறது.

    Next Story
    ×