search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    பேட்டரியே தீர்ந்து போனாலும் போன் பேசலாம் - அசத்தும் புது ஸ்மார்ட்போன்
    X

    பேட்டரியே தீர்ந்து போனாலும் போன் பேசலாம் - அசத்தும் புது ஸ்மார்ட்போன்

    • ஹூவாய் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஹூவாய் நிறுவனத்தின் சொந்தமான ஹார்மனி ஒஎஸ் கொண்டு இயங்குகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு பதில் தற்போது ஒரு பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் வழக்கத்திற்கு ஹூவாய் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. இந்த நிலையில், 2022 ஆண்டிற்கு ஹூவாய் மேட் 50 லைன் ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு P50 ப்ரோ ஸ்மார்ட்போனை அசாத்திய கேமரா அம்சங்களுடன் அறிமுகம் செய்து இருந்தது.

    தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்துலாக இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதை அடுத்து ஹூவாய் நிறுவனம் கூகுள் மற்றும் இதர அமெரிக்க நிறுவனங்களின் சிப்செட்களை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஹூவாய் நிறுவனம் தனக்கென சொந்தமாக ஹார்மனி ஒஎஸ்-ஐ உருவாக்கிக் கொண்டுள்ளது. பல்வேறு சிக்கல்களை கடந்தும் ஹூவாய் தொடர்ந்து புதுமைகளை உருவாக்குவதை நிறுத்தவில்லை.


    அந்த வகையில், ஹூவாய் மேட் 50 லைன் ஸ்மார்ட்போனில் எமர்ஜன்சி பேட்டரி மோட் எனும் அம்சம் வழங்கப்பட இருப்பதாக சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட் எல்லா ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட வேண்டும் என அனைவரும் விரும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த அம்சமானது ஸ்மார்ட்போனின் பேட்டரி முழுமையாக தீர்ந்து போனாலும், அழைப்புகளை எப்படியாவது மேற்கொள்ள செய்திடும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஹார்மனி ஒஎஸ் 3.0-இன் கீழ் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஹூவாய் மேட் 50 மாடல்களில் இந்த ஒஎஸ் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த அம்சம் அழைப்புகளை மேற்கொள்வதோடு குறுந்தகவல் அனுப்புவது, டாக்யுமெண்ட் மற்றும் லொகேஷன் கோட்களை ஸ்கேன் செய்யும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×