என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ரூ. 10,000 பட்ஜெட்டில் பக்கா போன் அறிமுகம் செய்த மோட்டோ
- இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
மோட்டோராலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய G35 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் FHD+ 120Hz LCD டிஸ்ப்ளே, யுனிசாக் T760 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவில் அதிகபட்சம் 12 5ஜி பேண்ட்களுடன் கிடைக்கும் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். இந்த ஸ்மார்ட்போன் IP52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவில் 4K வீடியோ பதிவு செய்யும் வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போனும் இது என்பது குறிப்பிடத்தக்கது.
5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோ G35 5ஜி ஸ்மார்ட்போன் 18 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது. புதிய மோட்டோ G35 5ஜி ஸ்மார்ட்போன் லீஃப் கிரீன், மிட்நைட் பிளாக் மற்றும் குவவா ரெட் என மூன்ரு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய மோட்டோ G35 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட், மோட்டோரோலா வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் டிசம்பர் 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது.