என் மலர்
புதிய கேஜெட்டுகள்
45 மணி நேர பிளேபேக் வழங்கும்.. ரூ. 999 விலையில் அறிமுகமான புதிய நாய்ஸ் இயர்பட்ஸ்!
- நாய்ஸ் ஏர் பட்ஸ் மினி 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மொத்தத்தில் நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
- இதில் உள்ள இன்ஸ்டாசார்ஜ் அம்சம் மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 120 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஏர் பட்ஸ் மினி 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் நாய்ஸ் ஏர் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சீரிசில் இடம்பெற்று இருக்கிறது. கடந்த மாதம் நாய்ஸ் பட்ஸ் ஏரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
இது ஓபன்-ஃபிட் இயர்பட்ஸ் ஆகும். இதில் 13 மில்லிமீட்டர் டிரைவர்கள் உள்ளன. இத்துடன் குவாட் மைக் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அழைப்புகளின் தரத்தை மேம்படுத்துகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 45 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது.
இதில் உள்ள இன்ஸ்டாசார்ஜ் அம்சம் மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 120 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும். இத்துடன் 50 ms லோ லேடன்சி மோட், ஹைப்பர் சின்க் கனெக்ஷன், IPX5 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
நாய்ஸ் ஏர் பட்ஸ் மினி 2 அம்சங்கள்:
13 மில்லிமீட்டர் டிரைவர்கள்
ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி
டச் கண்ட்ரோல்கள்
குவாட் மைக்
45 மணி நேரத்திற்கு பிளேபேக்
ஃபாஸ்ட் சார்ஜிங்
50 ms லோ லேடன்சி
ஹைப்பர் சின்க் தொழில்நுட்பம்
IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
விலை விவரங்கள்:
நாய்ஸ் ஏர் பட்ஸ் மினி 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஜெட் பிளாக், ஸ்னோ வைட், கால்ம் பெய்க் மற்றும் ஸ்பேஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை நாய்ஸ் வலைதளம், ப்ளிப்கார்ட்-இல் இன்று விற்பனைக்கு வருகிறது. அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் விலை ரூ. 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.