search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ப்ளூடூத் காலிங் உள்பட அசத்தல் அம்சங்கள் கொண்ட புது ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்
    X

    ப்ளூடூத் காலிங் உள்பட அசத்தல் அம்சங்கள் கொண்ட புது ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

    • 1.69 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240x280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச் உடல்நல ஆரோக்கியம் சார்ந்து ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.

    நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கலர்ஃபிட் விவிட் கால் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது. நாய்ஸ் HRX ஸ்ப்ரிண்ட் ஸ்மார்ட்வாட்ச்-ஐ தொடர்ந்து புதிய மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய நாய்ஸ் கலர்ஃபிட் விவிட் கால் ஸ்மார்ட்வாட்ச் மெட்டாலிக் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இத்துடன் ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட், பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 1.69 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240x280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் உடல்நல ஆரோக்கியம் சார்ந்து ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.

    நாய்ஸ் கலர்ஃபிட் விவிட் கால் அம்சங்கள்:

    1.69 இன்ச் 240x280 பிக்சல் டிஸ்ப்ளே

    100-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்

    100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    ப்ளூடூத் 5.1

    ப்ளூடூத் காலிங் வசதி

    260 எம்ஏஹெச் பேட்டரி

    இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்

    ஹார்ட் ரேட், SpO2, அக்செல்லோமீட்டர் சென்சார்கள்

    நாய்ஸ் ஹெல்த் சூட்

    IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

    ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்

    ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட்

    பில்ட்-இன் கேம்ஸ்

    நாய்ஸ் ஃபிட் ஆப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நாய்ஸ் கலர்ஃபிட் விவிட் கால் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1,299 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்பேஸ் புளூ, சில்வர் கிரே, ஜெட் பிளாக், ஃபாரஸ்ட் கிரீன், ரோஸ் பின்க் மற்றும் டீப் வைன் என்று ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது.

    Next Story
    ×