search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இணையத்தில் லீக் ஆன சியோமி டேப்லெட் விவரங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன சியோமி டேப்லெட் விவரங்கள்

    • சியோமி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது.
    • இதன் ப்ரோ மாடலில் ஃபிளாக்‌ஷிப் தர பிராசஸர், 120Hz AMOLED ஸ்கிரீன், குவாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்படலாம்.

    சியோமி நிறுவனம் 2021 வாக்கில் டேப்லெட் சந்தையில் களமிறங்கியது. முதற்கட்டமாக சியோமி பேட் 5 மற்றும் சியோமி பேட் 5 ப்ரோ என இரு மாடல்களை சியோமி நிறுவனம் வெளியிட்டு இருந்தது. தற்போது இரு மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனை சியோமி உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவை சியோமி பேட் 6 மற்றும் பேட் 6 ப்ரோ பெயர்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இரண்டு புது டேப்லெட் மாடல்களும் பிபா மற்றும் லிக்வின் எனும் குறியீட்டு பெயர்களில் உருவாக்கப்பட்டு வருகிறது. இவை சியோமி பேட் 6 மற்றும் பேட் 6 ப்ரோ பெயர்களில் விற்பனைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இரு மாடல்களில் பேஸ் வேரியண்ட் ஆன சியோமி பேட் 6 குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதே சிப்செட் ஒப்போ, விவோ மற்றும் லெனோவோ நிறுவன டேப்லெட் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    லீக் ஆன அம்சங்கள்:

    சியோமி பேட் 5 மாடலில் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்த நிலையில், புதிய சியோமி பேட் 6 மாடலில் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வழங்கப்படுகிறது. இத்துடன் சியோமி பேட் 6 டேப்லெட் M82 மாடல் நம்பர் கொண்டிருப்பதாகவும், இது சீனா, இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த டேப்லெட்டில் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    டாப் எண்ட் மாடலான சியோமி பேட் 6 ப்ரோ குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 120Hz AMOLED டிஸ்ப்ளே, 1880x2880 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்படுகிறது. இது முந்தைய பேட் 5 ப்ரோ மாடலில் இருந்த IPS LCD டிஸ்ப்ளேவில் இருந்து மிகப்பெரும் அப்டேட் ஆகும். மேலும் புதிய சியோமி பேட் 6 ப்ரோ மாடலில் குவாட் ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த டேப்லெட் M81 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த மாடல் பிரத்யேகமாக சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என xiaomiui தெரிவித்து இருக்கிறது. தற்போது சியோமி பேட் 5 மாடல் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×