search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஒருவழியாக 4ஜி-க்கு ரெடியான பிஎஸ்என்எல் - எப்போ அறிமுகம் தெரியுமா?
    X

    ஒருவழியாக 4ஜி-க்கு ரெடியான பிஎஸ்என்எல் - எப்போ அறிமுகம் தெரியுமா?

    • பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவைகளை விரைவில் துவங்குவதாக தனது சமூக வலைதளங்களில் டீசர் மூலம் தெரிவித்துள்ளது.
    • ரீசார்ஜ் திட்டங்களில் பயனர்களுக்கான வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் டேட்டா ஆகியவை அடங்கும்.

    மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த மாதம் நாடு முழுவதும் அதன் 4ஜி சேவையை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் 10,000 மொபைல் டவர்களை 4ஜி தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தி உள்ளது.

    இந்தியாவில் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏர்டெல், ஜியோ மற்றும் வி (வோடபோன்-ஐடியா) போன்ற முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் சேர பிஎஸ்என்எல் தயாராக உள்ளது. பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவைகளை விரைவில் துவங்குவதாக தனது சமூக வலைதளங்களில் டீசர் மூலம் தெரிவித்துள்ளது.

    பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வீடியோ மூலம் புதிய 4ஜி ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் பயனர்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால், 4ஜி டேட்டா உட்பட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கும்.

    இத்துடன் நிறுவனத்தின் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்கைக் குறிப்பிடுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவைகளை நாடு முழுவதும் தொடங்க தயாராக உள்ளது என்று தெரிவிக்கிறது. ரீசார்ஜ் திட்டங்களில் பயனர்களுக்கான வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் டேட்டா ஆகியவை அடங்கும். கூடுதலாக, பயனர்கள் பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் இசை போன்ற பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

    PV2399: இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.2,399. இது 395 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது.

    PV1999: இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மொத்தம் 600ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற தினசரி குரல் அழைப்புடன் 365 நாட்கள் செல்லுபடியாகும்

    PV997: இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.997 மற்றும் 160 நாட்கள் செல்லுபடியாகும். இது தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

    STV599: இது பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டமாகும், இது ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவுடன் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.

    STV347: இந்த திட்டத்தின் விலை ரூ. 347 மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புடன் 54 நாட்கள் செல்லுபடியாகும்.

    PV199: இந்த பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.

    PV153: இந்த திட்டம் 26 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் 26ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற தினசரி அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது.

    STV118: இந்த திட்டம் 20 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 10 ஜிபி டேட்டாவை உள்ளடக்கியது.

    Next Story
    ×