search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஜியோ- ஹாட் ஸ்டாருக்கு ஆப்பு வைத்த ஆப் டெவலப்பர்.. இணைய முகவரியை ரூ.1 கோடிக்கு வாங்கிய சிறுவர்கள்
    X

    ஜியோ- ஹாட் ஸ்டாருக்கு ஆப்பு வைத்த ஆப் டெவலப்பர்.. இணைய முகவரியை ரூ.1 கோடிக்கு வாங்கிய சிறுவர்கள்

    • ஜியோ சினிமாவுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
    • துபாயில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதர சகோதரி இரட்டையர் அந்த முகவரியை வாங்கியுள்ளனர்

    அதிக ஓடிடி தளங்களின் வருகையால் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களை இழந்து வருவதால் மற்றொரு ஓடிடி தளத்துடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டது. அதன்படி அம்பானியின் ரிலையன்ஸ் நடத்தும் ஜியோ சினிமாவுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    இந்த இரண்டு தளங்களும் இணைந்தால் அதற்கு ஜியோ ஹாட்ஸ்டார் என்று பெயர் வைக்கப்படும். ஹாட்ஸ்டார் ஜியோ சினிமாவுடன்தான் இணையும் என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து அறிந்த டெல்லியை சேர்ந்த மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் ஒருவர் ஜியோ ஹாட்ஸ்டார் [Jio- hotstar.com] என்ற இணையதள முகவரியை [domain] முன்கூட்டியே கண்டது வருடமே வாங்கி வைத்தார்.

    இந்த முகவரியை சொந்தமாக்கினால் மட்டுமே தற்போது ஒருங்கிணைத்து ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உருவாக்க உள்ள ஓடிடி அந்த பெயரில் செயல்பட முடியும். இந்நிலையில் அந்த முகவரியை அவர் ரிலையன்ஸிடம் நல்ல விலைக்கு விற்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அந்த முகவரிக்கு ரூ.1 கோடி வரை அந்த டெவலப்பர் விலை வைத்திருந்தார் என்ற தகவல்களும் வெளியாகின.

    இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் துபாயை சேர்ந்த இருவருக்கு டெல்லி டெவலப்பர் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அந்த இருவரும் குழந்தைகள் என்பது இந்த விவகாரத்தை அதிக சுவாரஸ்யமாகியுள்ளது. துபாயில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜைனம் மற்றும் ஜீவிகா என்ற சகோதர சகோதரி இரட்டையர் அந்த முகவரியை ரூ.1 கோடிக்கு வாங்கியுள்ளனர்.

    இவர்கள் இருவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்குக் கல்வி ரீதியாக உதவி செய்யும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் வாங்கி உள்ள ஜியோ ஹாட்ஸ்டார் இணைய முகவரியை அதற்கு பயன்படுத்த உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×