search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    விடை தேட பலகோடி வருடம் எடுக்கும் கணித சிக்கலை 5 நிமிடத்தில் தீர்க்கும் குவாண்டம் சிப் - கூகுள் சாதனை
    X

    விடை தேட பலகோடி வருடம் எடுக்கும் கணித சிக்கலை 5 நிமிடத்தில் தீர்க்கும் குவாண்டம் சிப் - கூகுள் சாதனை

    • கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் கூகுலின் குவாண்டம் ஆய்வகம் உள்ளது
    • 30 ஆண்டுகால சவாலை முறியடித்து ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

    குவாண்டம் கம்ப்யூட்டிங் என்பது குவாண்டம் கோட்பாட்டின் கொள்கைகளின் அடிப்படையில் கணினிகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் கணினி அறிவியலின் ஒரு பகுதியாகும். இயற்பியலின் கூறுகளை பயனப்டுத்தி மிகவும் சிக்கலான சிக்கல்களைத் தீர்க்க குவாண்டம் கம்ப்யூட்டிங் பயன்படுத்துகிறது.

    குவாண்டம் கம்ப்யூட்டிங் ஒரு வளர்ந்து வரும் அறிவியல் துறையாக உள்ள நிலையில் தற்போது அதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

    கூகிள் நிறுவனம் சார்பில் புதிய குவாண்டம் கம்பியூட்டிங் சிப் [CHIP] ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய குவாண்டம் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்த புதிய சிப்-க்கு வில்லோ [WILLOW] என்று பெயரிடப்பட்டுள்ளது.

    ஒரு சிக்கலான கணித பிராப்லம் -ஐ இன்றைய சூப்பர் கம்ப்யூட்டர்கள் தீர்க்க 10 செப்டில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொண்டால், அதே சிக்கலை 'வில்லோ' 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் தீர்க்கிறது என்று கூறப்பட்டுள்ளது. [1 (24 சைபர்கள்) = 1 செப்டில்லியன்]

    எங்கள் புதிய அதிநவீன குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் 30 ஆண்டுகால சவாலை முறியடித்து ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×