என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    பிப்ரவரி 1-இல் கேலக்ஸி அன்பேக்டு 2023 நிகழ்வு - இணையத்தில் லீக் ஆன தகவல்!
    X

    பிப்ரவரி 1-இல் கேலக்ஸி அன்பேக்டு 2023 நிகழ்வு - இணையத்தில் லீக் ஆன தகவல்!

    • சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது ஃபிளாக்‌ஷிப் மாடல்கள் அந்நிறுவனத்தின் விற்பனையை 2023 முதல் காலாண்டில் அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

    சாம்சங் நிறுவனம் முற்றிலும் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டிற்கான முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. கேலக்ஸி S23 சீரிசில் - கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    இது குறித்து டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், சாம்சங் தனது கேலக்ஸி அன்பேக்டு 2023 நிகழ்வை பிப்ரவரி 1 ஆம் தேதி நடத்தும் என தெரிவித்து இருக்கிறார். எனினும், சாம்சங் நிறுவனம் இது தொடர்பாக எந்த தகவலையும் வழங்கவில்லை. 2023 கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பெரும்பாலும் அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் என்றே தெரிகிறது.

    புது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை முன்கூட்டியே அறிமுகம் செய்வதன் மூலம் சாம்சங் போட்டியை சமாளிக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை பிப்ரவரி 17 ஆம் தேதி துவங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் 2023 முதல் காலாண்டு விற்பனையில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்ய சாம்சங் திட்டமிடுகிறது.

    முன்னதாக கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் பட்டியலிடப்பட்டது. அதன் படி இந்த ஸ்மார்ட்போன் SM-S911B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 578 புள்ளிகளையும், மல்டி கோரில் 2 ஆயிரத்து 118 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.

    Next Story
    ×