என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அறிந்து கொள்ளுங்கள்
டூயல் கேமரா அம்சம் அறிமுகம் செய்த ஸ்னாப்சாட்
- ஸ்னாப்சாட் செயலியில் புது அம்சம் வழங்கப்பட இருப்பதை அந்நிறுவனம் தனது வலைதள பதிவில் தெரிவித்து இருக்கிறது.
- இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனின் இரு கேமராக்களை பயன்படுத்தி பதிவிட முடியும்.
ஸ்னாப்சாட் செயலியில் டூயல் கேமரா எனும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனின் ரியர் மற்றும் செல்பி என இரு கேமரா சென்சார்களையும் பயன்படுத்த முடியும்.
புது அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் பல்வேறு பரிணாமங்களை ஸ்னாப்சாட்டில் பதிவு செய்ய முடியும். இதன் மூலம் அனைவரும் மொமண்டில் பங்கேற்க முடியும். டூயல் கேமரா அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் ஸ்னாப்சாட் செயலியை திறந்து கேமரா டூல்பாரில் உள்ள புதிய ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்த பின் ஸ்னாப், ஸ்டோரிஸ் மற்றும் ஸ்பாட்லைட் வீடியோக்களை உருவாக்குவதற்கான ஆப்ஷனை பார்க்க முடியும். துவக்கத்தில் டூயல் கேமரா அம்சம் நான்கு லே-அவுட்கள் இடம்பெற்று இருக்கும். டூயல் கேமரா அம்சத்துடன் மற்ற ஸ்னாப்சாட் அம்சங்களும் இடம்பெற்று இருக்கும்.
முதற்கட்டமாக இந்த அம்சம் ஸ்னாப்சாட் ஐஓஎஸ் வெர்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஐஒஎஸ்-ஐ தொடர்ந்து ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் இந்த அம்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், ஆண்ட்ராய்டு வெர்ஷனில் எப்போது வழங்கப்படும் என்ற தகவல் மர்மமாகவே உள்ளது.