search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பிரெஞ்சு ஓபன்: 2-வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்வியாடெக்
    X

    பிரெஞ்சு ஓபன்: 2-வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்வியாடெக்

    • பிரெஞ்சு ஓபனில் ஸ்வியாடெக் தொடர்ச்சியாக ருசித்த 15-வது வெற்றி இதுவாகும்.
    • அவர் 2-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் (ஜப்பான்) நாளை மோத உள்ளார்.

    ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) தன்னை எதிர்த்த தகுதி நிலை வீராங்கனை ஜியான்ஜியானை (பிரான்ஸ்) 6-1, 6-2 என்ற நேர் செட்டில் ஊதித்தள்ளினார். பிரெஞ்சு ஓபனில் ஸ்வியாடெக் தொடர்ச்சியாக ருசித்த 15-வது வெற்றி இதுவாகும். அவர் 2-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் (ஜப்பான்) நாளை மோத உள்ளார்.

    இதே போல் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் சச்சியா விக்கெரியை (அமெரிக்கா) வெளியேற்றினார். தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் கோகோ காப் 6-1, 6-1 என்ற நேர் செட்டில் ஜூலியா அவ்டீவாவை (ரஷியா) விரட்டினார். வோன்ட்ரோசோவா (செக்குடியரசு), ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி), லேலா பெர்னாண்டஸ் (கனடா), சம்சோனோவா (ரஷியா) ஆகியோரும் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

    Next Story
    ×