என் மலர்
டென்னிஸ்
X
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி - 3வது சுற்றுக்கு முன்னேறினார் சபலென்கா
Byமாலை மலர்1 Jun 2023 5:38 AM IST
- பிரெஞ்சு ஓபன் டென்னிசின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
- இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வென்றார்.
பாரீஸ்:
நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
2வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, சக நாட்டு வீராங்கனை ஷிமனோவிச்சுடன் மோதினார்.
இதில் சபலென்கா 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story
×
X