search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    விம்பிள்டன் இறுதிப்போட்டி ஜோகோவிச் ஆதிக்கத்தை அல்காரஸ் தடுப்பாரா?
    X

    விம்பிள்டன் இறுதிப்போட்டி ஜோகோவிச் ஆதிக்கத்தை அல்காரஸ் தடுப்பாரா?

    • விம்பிள்டன் பட்டத்தை அதிக முறை வென்றவர் ரோஜர் பெடரர்.
    • ஜோகோவிச்சை வீழ்த்தி 2-வது முறையாக கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் வேட்கையில் அல்காரஸ் உள்ளார்.

    லண்டன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள் டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் 23 கிராண்ட் பட்டம் வென்ற சாதனையாளரும், தரவரிசையில் 2- வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) - உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) மோதுகிறார்கள்.

    விம்பிள்டன் பட்டத்தை அதிக முறை வென்றவர் ரோஜர் பெடரர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த இவர் 8 தடவை சாம்பியனாகி இருந்தார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினால் பெடரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்வார். அவர் விம்பிள்டன் போட்டியில் 7 முறை வெற்றி பெற்றுள்ளார்.

    36 வயதான நடப்பு சாம்பியன் ஜோகோவிச் விம்பிள்டனில் 2018 ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை பட்டம் பெற்றுள்ளார். கொரோனா பாதிப்பால் 2020 ஆண்டு போட்டி நடைபெறவில்லை.

    அபாரமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாகவும், ஒட்டு மொத்தமாக 24-வது கிராண்ட் சிலாமையும் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 10 தடவையும், பிரெஞ்சு ஓபனை 3 தடவையும், அமெரிக்க ஓபனை 3 தடவையும் வென்றுள்ளார்.

    20 வயதான அல்காரஸ் முதல்முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டியில் விளையாடுகிறார். அமெரிக்க ஓபன் சாம்பியனான அவர் ஜோகோவிச்சின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஜோகோவிச்சை வீழ்த்தி 2-வது முறையாக கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் வேட்கையில் அல்காரஸ் உள்ளார்.

    சமபலம் வாய்ந்த இருவரும் மோதும் விம்பிள்டன் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் நேருக்கு நேர் மோதுவது 3-வது முறையாகும். இதுவரை நடந்த 2 ஆட்டத்தில் தலா 1 வெற்றியை பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை வான்ட்ரோ சோவா சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜபேரை (துனிசியா) வீழ்த்தி முதல் கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றார்.

    Next Story
    ×