ஈசி தான்.. நிமிடங்களில் கார் பேட்டரியை நீங்களாகவே மாற்றிக் கொள்ள சூப்பர் டிப்ஸ்?
- மிக எளிமையான டூல்களை கொண்டு கார் பேட்டரியை எளிதில் மாற்றலாம்.
- நீங்களாகவே காரின் பேட்டரியை மாற்றும் போது, பணத்தை மிச்சப்படுத்தலாம்.
கார்களில் வழங்கப்படும் பேட்டரி குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரையிலும், எவ்வித பிரச்சினையும் இன்றி சீராக இயங்கும் திறன் கொண்டிருக்கும். எனினும், இதைத் தொடர்ந்து காரின் பேட்டரியை மாற்றுவதற்கான தேவை கட்டாயம் ஏற்படும்.
அந்த வகையில் காரின் பேட்டரியை மாற்றுவதற்கான தேவை ஏற்படும் போது, நீங்களாகவே கார் பேட்டரியை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம். மிக எளிமையான டூல்களை கொண்டு கார் பேட்டரியை எளிதில் மாற்றிவிட முடியும். நீங்களாகவே காரின் பேட்டரியை மாற்றிக் கொள்ளும் போது, ஒரளவுக்கு பணத்தை மிச்சப்படுத்தவும் முடியும்.
கார் பேட்டரியை அறிந்து கொள்ளுங்கள்:
ஆன்லைன் வலைதளம் அல்லது உள்ளூர் பேட்டரி கடைகளில் பேட்டரியை வாங்கும் முன், கார் பேட்டரியின் அம்சங்கள் அறிந்து வைப்பது அவசியம் ஆகும். இதற்கு பேட்டரி பேக் மீதோ அல்லது, யூசர் மேனுவலை பார்க்க வேண்டும்.
பழைய பேட்டரியை கண்டறிதல்:
அனைத்து கார்களிலும் பேட்டரி, பொனெட்டின் கீழ் பொருத்தப்பட்டு இருக்காது. சில கார்களில் பேட்டரி, பூட் பகுதியிலும் பொருத்தப்பட்டு இருக்கலாம். இதற்கும் யூசர் மேனுவலை பார்க்கவோ அல்லது சர்வீஸ் சென்டரை தொடர்பு கொண்டு பேட்டரி இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம்.
துண்டித்தல்:
கார் பேட்டரியை கண்டறிந்த பிறகு, அதில் இணைக்கப்பட்டு இருக்கும் வயர்களை கழற்றி விட வேண்டும். அனைத்து பேட்டரி பேக்-களிலும் இரண்டு முனையங்கள் இருக்கும். ஒன்று பிளாக் வயர் மூலமாகவும், மற்றொன்று ரெட் வயர் மூலமாகவும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ரெட் வயர் பாசிடிவ் முனையம் ஆகும்.
சுத்தம் அவசியம்:
காரில் இருந்த பழைய பேட்டரியை கழற்றிய பிறகு, பேட்டரி முனையங்களை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். சில சமயங்களில் பேட்டரி முனையங்களில் அரிப்பு ஏற்பட்டு இருக்கலாம். இவ்வாறு முனையங்கள் அரித்த நிலையில் இருப்பது கனெக்டர்களின் திறனுக்கு நல்லது கிடையாது.
இதன் காரணமாக பேட்டரி முனையம் மற்றும் பேட்டரி டிரே உள்ளிட்டவைகளை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது மின்சாரம் சீராக பாயும். முனையங்கள் சுத்தமாக இருக்கும் போது, பேட்டரி ஆயுள் நீடிக்கும்.
புதிய பேட்டரி:
முனையங்கள் மற்றும் பேட்டரி டிரே சுத்தம் செய்த பிறகு, புதிய பேட்டரியை இன்ஸ்டால் செய்து விடலாம். இன்ஸ்டால் செய்யும் போது, பிளாக் வயரை நெகடிவ் முனையத்திலும், ரெட் வயரை பாசிடிவ் முனையத்திலும் இணைக்க வேண்டும். பேட்டரி முனையங்கள் சீராக இணைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதன் பிறகு பேட்டரி பேக்-ஐ பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.