null
ரூ. 7.99 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிட்ரோன் பசால்ட்
- அக்டோபர் 31-ம் தேதி வரை புக் செய்பவர்களுக்கு இந்த விலையில் கிடைக்கும்.
- டாடா கர்வ், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட் ஆகியவற்றிற்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்ரோன் பசால்ட் சொகுசு கார் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. யாருமே எதிர்பாராத வகையில் ரூ.7.99 லட்சம் என விலை நிர்ணயம் செய்துள்ளது சிட்ரோன் நிறுவனம். ஏற்கனவே இருக்கும் ஷோரூமில் மட்டுமே இந்த விலைக்கு கிடைக்கும் குறிப்பிடத்தகுந்தது. அக்டோபர் 31-ம் தேதி வரைதான் இந்த விலைக்கு கிடைக்கும்.
சாய்வான மேற்கூரை, மூன்று அடுக்குகளாக காட்சியளிக்கும் முகப்பு பகுதி, கவர்ச்சியான எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஆர்எல் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர ஒரு ஹாலோஜன் பனி மின் விளக்கும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவைகள் இந்த காரின் முன் பக்கத்திற்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளன.
டைமண்ட் கட் அலாய் வீல், பிளாஸ்டிக் கிளாடிங், எல்இடி டெயில் லைட், இரண்டு வண்ணங்கள் கொண்ட ரியர் பம்பர் ஆகியவையும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
ப்ளஷ் (Plush) வகை இருக்கை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. 3 படிகளாக அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளக் கூடிய இருக்கையே பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக, உயரமான பயணிகள் தங்களின் தேவைக்கேற்ப இருக்கையை அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள முடியும். இதுதவிர, பின் பக்கத்திற்கு என தனி ஏசி துவாரங்கள் உள்ளன.
டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
கியர்பாக்ஸை பொருத்த வரை 5 ஸ்பீடு மேனுவல் மட்டுமே இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது. ஆனால், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு வகையான கியர்பாக்ஸ ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது.
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டாடா கர்வ்-க்கு இது மிகப்பெரிய போட்டியாக இருக்கும். இதுதவிர, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட கார் மாடல்களுக்கும் இது போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.