மெரிடியன் விலையை திடீரென மாற்றிய எம்ஜி மோட்டார்ஸ்..!
- ஜீப் நிறுவனம் அட்வென்ச்சர் அஸ்யுர்டு ப்ரோகிராம் திட்டத்தை நாடு முழுக்க அறிவித்தது.
- ஜீப் மெரிடியன் காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியன்ட்களின் விற்பனை சமீபத்தில் நிறுத்தம்.
ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மற்றும் மெரிடியன் எஸ்யுவி மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. காம்பஸ் மாடல் விலை ரூ. 43 ஆயிரமும், மெரிடியன் எஸ்யுவி விலை ரூ. 3 லட்சத்து 14 ஆயிரமும் அதிகரித்து இருக்கிறது.
ஜீப் மெரிடியன் X வேரியன்ட் விலை ரூ. 42 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. என்ட்ரி லெவல் (O) 4x2 AT வேரியன்ட் விலை ரூ. 45 ஆயிரமும், லிமிடெட் (O) 4x2 AT மற்றும் லிமிடெட் பிளஸ் 4x2 AT மாடல்களின் விலை முறையே ரூ. 47 ஆயிரம் மற்றும் ரூ. 48 ஆயிரம் உயர்த்தப்பட்டது.
டாப் என்ட் லிமிடெட் (O) 4x4 AT மற்றும் லிமிடெட் பிளஸ் 4x4 AT மாடல்களின் விலை ரூ. 51 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. மெரிடியன் அப்லேன்ட் மாடல் விலை ரூ. 3 லட்சத்து 14 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் தான் ஜீப் நிறுவனம் அட்வென்ச்சர் அஸ்யுர்டு ப்ரோகிராம் திட்டத்தை நாடு முழுக்க அறிவித்தது. இதற்காக ALD ஆட்டோமோடிவ் உடன் ஜீப் கூட்டணி அமைத்தது. இதில் நிச்சயிக்கப்பட்ட பைபேக், நீட்டிக்கப்பட்ட வாரண்டி, வருடாந்திர பராமரிப்பு, ரோடுசைடு அசிஸ்டன்ஸ், காப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இந்த பலன்கள் ஜீப் காம்பஸ் மற்றும் ஜீப் மெரிடியன் மாடல்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதுதவிர ஜீப் மெரிடியன் காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியன்ட்களின் விற்பனையை ஜீப் நிறுவனம் நிறுத்தியது.