புஷ்பா 2 விவகாரம்: சிறுவன் உடல்நிலையில் முன்னேற்றம்
- அல்லு அர்ஜுன் எங்களால் கைது செய்யபட்டார் என்று மனவேதனை எங்களுக்கு உள்ளது.
- வழக்கை வாபஸ் வாங்க முடிவு செய்துள்ளேன்.
திருப்பதி, டிச.25-
ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 சினிமா பார்க்க சென்ற போது நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.
அவரது மகன் ஸ்ரீதேஜ் என்பவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த ஸ்ரீ தேஜ் சுய நினைவை இழந்து ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீதேஜின் தந்தை பாஸ்கர் கூறுகையில்:-
அல்லு அர்ஜுன் எங்களால் கைது செய்யபட்டார் என்று மனவேதனை எங்களுக்கு உள்ளது. இதனால் வழக்கை வாபஸ் வாங்க முடிவு செய்துள்ளேன். வழக்கு வாபஸ் வாங்க வேண்டும் என யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.