உள்ளூர் செய்திகள்

பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும் - பொது மக்கள் கோரிக்கை

Published On 2023-01-26 08:48 GMT   |   Update On 2023-01-26 08:48 GMT
  • தலைஞாயிறு ஒன்றியத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
  • இதுவரை ஒரு பஸ் நிலையம் கூட அமைக்கப்படவில்லை. தலைஞாயிறுக்கு வரும் பஸ்கள் கடைவீதியிலேயே நிறுத்தப்படுகிறது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு ஒன்றியத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு காவல் நிலையம், வட்டார மருத்துவமனை, வட்டார வளர்ச்சி அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்ட பல அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில், மணக்குடி, ஓரடியம்புலம், நீர்முளை போன்ற கிராமங்கள் இருந்து ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பலரும் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த ஊரில் இதுவரை ஒரு பஸ் நிலையம் கூட அமைக்கப்படவில்லை. தலைஞாயிறுக்கு வரும் பஸ்கள் கடைவீதியிலேயே நிறுத்தப்படுகிறது.

இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நேரிசல் ஏற்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தலைஞாயிறில் பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும் என காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினரும், விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளருமான சுர்ஜித் சங்கர் மற்றும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News