கோவில்பட்டி அருகே பூமாதேவி கோவிலில் அன்னதான பூஜை
- துளசிங்க நகர் அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத முதல் அன்னதான பூஜை நடந்தது.
- மதியம் 12.35 மணிக்கு அன்னதான பூஜையும் சிறப்பு அலங்கார சோடனை தீபாராதனையும் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அடுத்த மந்தித்தோப்பு துளசிங்க நகர் அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத முதல் அன்னதான பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி காலை 7 மணிக்கு மகா கணபதி பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், அம்பாள் மூலமந்திர ஹோமம், தீபாராதனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து 9மணிக்கு மூலவர் உற்சவர் அம்பாள் குருவுக்கும் 21 வகையான மஞ்சள், மாபொடி, திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம் பூர்ன கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12.35 மணிக்கு அன்னதான பூஜையும் சிறப்பு அலங்கார சோடனை தீபாராதனையும் நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில், ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், சங்கரன், ஓதுவார் பூஜைகளை செய்தார்கள். இவ்விழாவில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், மாரிஸ் வரன், ஆறுமுகம் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பழனியம்மாள், பூமாலட்சுமி, லட்சுமி, மாரித்தாய், மற்றும் ஊர் பொதுமக்கள் பூஜையில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தார்கள்.