- காளியப்பன், மனைவி பழனாள் பிணமாக கிடந்ததும் தெரிய வந்தது.
- ரத்தத்தில் எழுதப்பட்ட பெயர்களையும் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.
கோபி:
கோபி செட்டிபாளையம் சிவசண்முகம் வீதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 65). இவர் பெட்டி க்கடை வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பழனாள் (52). இவர்களது மகன் ராஜன்.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காளியப்பனின் மகன் ராஜன் ஈரோடு பஸ் நிலையத்தில் நிலக்கடலை வியாபாரம் செய்து வந்த போது நடந்த தகராறில் கொலை செய்யப்பட்டார்.
இதனால் கணவன், மனைவி மட்டும் வீட்டில் வசித்து வந்தனர். மேலும் காளியப்பன் உடல் நிலை சரி யில்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காளி யப்பன் வீட்டின் முன்பு இருந்த பெட்டி கடையை திறந்து வியாபாரம் செய்தார்.
அன்று இரவு பெட்டிக்கடையை மூடி விட்டு வீட்டிற்குள் சென்றார். இதையடுத்து கடந்த 3 நாட்களாக கணவன்- மனைவி இரு வரும் வீட்டை விட்டு வெளி யே வரவில்லை.
இந்நிலையில் காளியப்பன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முன்பக்க கதவை திறந்து மாடிக்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்தனர்.
அப்போது காளியப்பன் தூக்கில் தொங்கிய நிலை யில் பிணமாக கிடப்பதும், அவரது மனைவி பழனாள் தரையில் பிணமாக கிடந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் காளியப்பன் வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே செல்ல முயன்ற போது கதவை உடைத்தாலும், திறக்க முடியாத அளவிற்கு கட்டிலை வைத்து தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் போராடி அறைக்குள் சென்று பார்த்த போது கணவன்-மனைவி 2 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதும், பழனாள் உடல் எடையை தாங்காமல் கயிறு அறுந்து கீழே விழு ந்ததும் தெரிய வந்தது.
மேலும் அவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் இருந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்களின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு முன்பு காளியப்பன் ரத்தத்தினால் சுவற்றில் சிலரின் பெயர்களை எழுதி வைத்து இருந்தார். ரத்தத்தினால் எழுதி இருந்த பெயர்கள் யாருடையது.
கணவன்- மனைவி தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர் தங்கம் பவானி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்துள்ளனர்.
இதை தொடர்ந்து ரத்தத்தில் எழுதப்பட்ட பெயர்களையும் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் மற்றும் போலீசாரின் விசார ணைக்கு பிறகே கணவன், மனைவி தற்கொலைக்கான காரணம் குறித்து தெரிய வரும்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்து கொண்ட காளியப்பன் 26- வது வார்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை வராக இருந்து வந்தார்.