வருகிற 18-ந் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரெயில் சீர்காழியில் நின்று செல்லும்
- ராமேசுவரம்-சென்னை எழும்பூர் ரெயில் சீர்காழி, கடலூர் துறைமுகத்திலும் நின்று செல்லும்.
- கன்னியாகுமரி-புதுச்சேரி விரைவு ரெயில் சீர்காழி, திருப்பாதிரிபுலியூரிலும் நின்று செல்லும்.
சீர்காழி:
தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-
திருச்சி ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட முக்கிய ரெயில் நிலையங்களில், விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதனை ஏற்று குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் விரைவு ரெயில்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 18-ந் தேதி முதல் விரைவு ரெயில்கள் நிற்கும் நிலையங்கள் விவரம் வருமாறு: -
சென்னை எழும்பூர்-மதுரை ( வண்டி எண்-12637) விரைவு ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
தூத்துக்குடி-சென்னை எழும்பூர் (வண்டி எண்-12694) ரெயில் அரியலூரிலும், ராமேசுவரம்-சென்னை எழும்பூர் (வண்டி எண்-16752) ரெயில் சீர்காழி, கடலூர் துறைமுகத்திலும் நின்று செல்லும்.
இதேப்போல் சென்னை எழும்பூர்-காரைக்கால் (வண்டி எண்-16175) விரைவு ரெயில் சீர்காழி, பேரளத்திலும், சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் (வண்டி எண்-16865) விரைவு ரெயில் சீர்காழியிலும் நின்று செல்லும்.
வருகிற 20-ந் தேதி முதல் ராமேசுவரம்-திருப்பதி (வண்டி எண்-16780) விரைவு ரெயில் சீர்காழி, திருப்பாதிரி புலியூரில் நின்று செல்லும்.
வருகிற 22-ந் தேதி முதல் மயிலாடுதுறை-மைசூர்-மயிலாடுதுறை (வண்டி எண்-16231/16232) ரெயில் பாபநாசத்திலும், 24-ந் தேதி முதல் முதல் கன்னியாகுமரி-புதுச்சேரி (வண்டி எண்-16862) விரைவு ரெயில் சீர்காழி, திருப்பாதிரி புலியூரிலும் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.