உள்ளூர் செய்திகள்
கும்பகோணத்தில் 27-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
27-ம்தேதி காலை 11 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
கும்பகோணம்:
கும்பகோணம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில், 27-ம்தேதி காலை 11 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், கும்பகோணம் கோட்டத்துக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று, தங்களது குறைகளை நேரில் தெரிவித்துக் தீர்வு காணலாம் என கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா தெரிவித்துள்ளார்.