தஞ்சை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
- நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
- தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்ததில் பயணிகள் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர்:
நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மேற்பார்வையில் தஞ்சை இருப்புப்பாதை இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், தனிபிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், ரயில்வே பாதுகாப்பு படை சப்- இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், மகாதேவன் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகள் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை நடத்தினர்.
இருப்பு பாதை போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.
ரெயில் நிலைய வளாகம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தண்டவாளத்தில் வெடி பொருட்கள் ஏதும் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு சோதனை செய்தனர்.
மேலும் நடைமேடை முழுவதும் கண்காணித்து வருகின்றனர். பார்சல் அலுவலகத்தில் உள்ள பார்சல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், தஞ்சை மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
தொடர்ந்து ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது
இதேபோல் நீடாமங்கலம், பூதலூர், மன்னார்குடி ஆகிய ரெயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.