உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்.

திருத்துறைப்பூண்டியில், அரசு பஸ்சை சிறை பிடித்த பொதுமக்கள்

Published On 2022-12-26 07:51 GMT   |   Update On 2022-12-26 07:51 GMT
  • நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர்.
  • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திருத்துறைப்பூண்டி:

திசையன்விளை அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த இரு பஸ்கள் திருச்செந்தூர், ராமேஸ்வரம் வழியாக திருத்துறைப்பூண்டியை கடந்து வேளாங்கண்ணி செல்வது வழக்கம்.

திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் ராமேஸ்வரம், திருச்செந்தூர் ஆகிய கோவிலுக்கு செல்ல இந்த இரு பஸ்களை தான் நம்பி உள்ளனர்.

அப்படி இருக்கும் வகையில், இந்த பஸ்கள் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்திற்குள் வராமல் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர்.

இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்தனர்.

தகவலறிந்து வந்த திருத்துறைப்பூண்டி போலீசார் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி இனி இந்த இரு பஸ்களும் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்துக்குள் வரும் என உறுதி அளித்தததன் பேரில் பொதுமக்கள் பஸ்வை விடுவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News