உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியில் ஈடுபட்ட அரிமா சங்க நிர்வாகிகளை படத்தில் காணலாம்.


பாவூர்சத்திரத்தில் ரெயில் நிலைய நடை மேடையை சுத்தம் செய்த அரிமா சங்கத்தினர்

Published On 2022-11-13 08:01 GMT   |   Update On 2022-11-13 08:01 GMT
  • ரெயில் நிலைய அதிகாரிகளின் ஒப்புதலோடு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
  • கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

தென்காசி:

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக பாவூர்சத்திரம் ரெயில் நிலைய நடைமேடையை சுத்தம் செய்ய வேண்டும் என நிர்வாகிகள் உறுப்பினர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு ரெயில் நிலைய அதிகாரிகளின் ஒப்புதலோடு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு துணை கோட்ட பொறியாளர் கபிலன், பிரிவு பொறியாளர் யூசுப், பாவூர்சத்திரம் நிலைய கண்காணிப்பாளர் மாணிக்க்ஷா மற்றும் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தை சேர்ந்த கே.ஆர்.பி. இளங்கோ, பொன்னறிவழகன் உள்ளிட்ட 25 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News