விஷம் குடித்து தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு
- மதுரையில் விஷம் குடித்து தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- 4 ஆயிரத்து 543 பேர் குணமடைந்தனர் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது
மதுரை
சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர், மதுரை அரசு மருத்து வமனை நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்விகள் எழுப்பி யிருந்தார். அதற்கு மருத்துவ மனை நிர்வாகம் பதில் அளித்தது. அதில் மதுரை மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு 2 ஆயிரத்து 380 பேரும், 2022-ம் ஆண்டு 2 ஆயிரத்து 550 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 930 பேர் விஷம் குடித்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 2021-ம் ஆண்டு 180 பேரும், 2022-ம் ஆண்டு 207 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
அதாவது 2 ஆண்டுகளில் மட்டும் 387 பேர் விஷம் குடித்து இறந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் விஷம் குடித்தோருக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக பிரிவு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அங்கு மருத்துவ குழுவினரின் துரித சிகிச்சை காரணமாக 4 ஆயிரத்து 543 பேர் குணமடைந்தனர் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.