உள்ளூர் செய்திகள்

என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை

Published On 2022-12-15 08:29 GMT   |   Update On 2022-12-15 08:29 GMT
  • மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை செய்தனர்.
  • அப்போது வீட்டில் இருந்து வாள், வேல் கம்பு, சுருள் கத்தி, சைக்கிள் செயின், கேடயம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த மாதம் குக்கர் வெடிகுண்டு, கோவையில் காரில் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் இன்று காலை என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் அருள் மகேஷ் தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழுவினர் மதுரை நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த உமர்ஷெரீப் (வயது 42) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் இருந்து வாள், வேல் கம்பு, சுருள் கத்தி, சைக்கிள் செயின், கேடயம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. சில மணி நேர சோதனையின் பின் உமர்ஷெரீப்பை ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடனும் விசாரணை நடத்தப்பட்டது.

என்.ஐ.ஏ. சோதனை யின்போது அந்தப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News