நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ., அமைச்சர் தங்கவேலு ஆகியோருக்கு மாலை அணிவிக்கப்பட்டபோது எடுத்தபடம்.
சங்கரன்கோவிலில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்
- ராஜா எம்.எல்.ஏ., முன்னிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
- நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான தலைவன் கோட்டை விஜயபாண்டின் தலைமையில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத்தில் உள்ள கிராமங்களான தலைவன் கோட்டை, ஈச்சம்பொட்டல்புதூர், நொச்சிகுளம், ஆண்டார்குளம், வடமலாபுரம், நகரம், துரைச்சாமிபுரம், முள்ளிக்குளம், தாருகாபுரம், பாறைப்பட்டி, நெல்கட்டும்செவல், அரியூர், கீழப்புதூர், சங்கனாப்பேரி, மலையடிக்குறிச்சி ஆகிய ஊர்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.க.தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, நகரச் செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, புளியங்குடி நகர செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவருமான அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களை மாவட்ட செயலாளர் ராஜா சால்வை அணிவித்து வரவேற்றார்.