உள்ளூர் செய்திகள்

தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களில் ஒரு பகுதி.

பனைமடல் கூத்தாண்டவர் கோவில் தேர்த்திருவிழாபக்தர்கள் குவிந்தனர்

Published On 2023-04-15 09:33 GMT   |   Update On 2023-04-15 09:33 GMT
  • 300 ஆண்டு பழமையான கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது.
  • பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.

வாழப்பாடி:

வாழப்பாடி அடுத்த பனைமடல் கிராமத்தில் சுற்றுப்புற கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும், 300 ஆண்டு பழமையான கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு தேர்த்திரு விழா கடந்த 2 நாட்களாக கொண்டா டப்பட்டது. இவ்விழாவில், அரவான் பலி கொடுத்தல், கூத்தாண்டவர் கண் திறப்பு நிகழ்ச்சிகளும் திருநங்கைகள் பங்கேற்புடன் மரபு மாறாமல் நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகளும், திருத்தேர் ரதமேறும் வைபோவமும், சன்னிதானத்தை சுற்றி தேரோட்டமும் நடைபெற்றது.

விழாவில் வாழப்பாடி, ஏத்தாப்பூர், பெத்தநா யக்கன்பாளையம், பேளூர், இடையப்பட்டி, தாண்டா னுார் மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த ஆயி ரக்க ணக்கான பக்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர். முன்னதாக, வேண்டுதல் நிறை வேற்றிய சுவாமிக்கு கர கம் எடுத்தும், அலகு குத்தியும், பொங்கலிட்டு ஆடு, கோழி பலியிட்டும் ஏராள மான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இடையப்பட்டி யில் இருந்து கல்யாணகிரி வரை வழிநெடு கிலும், பாரம்ப ரிய முறைப்படி பொதுமக்கள் நீர் மோர் பந்தல் அமைத்தும், தானி யக்கூழ், அன்னதானம் வழங்கியும் பக்தர்களின் தாகம் தீர்த்த னர்.

Tags:    

Similar News