ஆபத்தான நிலையில் தொங்கும் வழி காட்டி பலகை
- ஆபத்தான நிலையில் தொங்கும் வழிகாட்டி பலகையை அப்புறப்படுத்த வேண்டும்.
- ராமநாதபுரம் மாவட்டம் நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் ஆன்மிக புனித தலமாகவும் திகழ்கி–றது. மேலும் ஏர்வாடி, உத்தர–கோசமங்கை, திருப்புல்லாணி, தேவி பட்டினம் உள் ளிட்ட தலங்களுக்கு அனைத்து மாநிலத்தவர்கள் அதிக–ளவில் வந்து செல்கின் றனர். இவர்கள் தெரிந்து கொள்வதற்காக ஊர்களின் பெயர், கி.மீ. கொண்ட வழிகாட்டி பெயர் பலகை–கள் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் சிக்னல் போஸ்ட்டில் வைக்கப்பட் டுள்ளது. இப்படி வைத் துள்ள பெயர் பலகையை முறையாக நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்ப–தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் பல இடங்களில் ரோட்டின் நடுவே சேதம–டைந்து தொங்குகின்றன. அதிக காற்று வீசும் போது அறுந்து வாகன ஓட்டிகளின் தலையில் விழும் அபாயம் உள்ளது. ராமநாதபுரம்-மதுரை ரோடு இ.சி.ஆர்., சுற்றுச்சாலை நடுவே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை அறுந்து தொங்கு–வதால் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடக்கின்றனர்.
எனவே தேசிய நெடுஞ் சாலை துறையினர் உடன–டியாக ஆபத்தான பெயர் பலகையை அகற்றி முறை–யாக பாராமரிக்க பொது–மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.