உள்ளூர் செய்திகள்

ஜாம்புவானோடை தர்ஹாவில் நடந்த சந்தனக்கூடு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

ஜாம்புவானோடை தர்ஹாவில் சந்தனக்கூடு விழா

Published On 2022-12-05 09:09 GMT   |   Update On 2022-12-05 09:09 GMT
  • அதிகாலை 5 மணிக்கு புனித ரவுலா ஷாரிப்புக்கு சந்தனம் பூசப்பட்டது.
  • மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள புகழ் பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்ஹாவில் 721-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அதிகாலை இரண்டு முப்பது மணிக்கு புனித அம்மா பள்ளிவாசல் சென்று வலம் வந்து, பின் 40 அடி உயரமுள்ள சந்தனக்கூடு ஜருக கண்ணாடியால் ஜோடிக்கப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு முதன்மை தர்கா பாரம்பரிய அறங்கா வலர் பாக்கர் அலி தலைமை யில்தர்காவை சுற்றி வலம் வந்தது.

தொடர்ந்து, இன்று சந்தனக்கூடு தர்காவலம் சுற்றி அதிகாலை 5 மணிக்கு புனித ரவுலா ஷாரிப்புக்கு புனித சந்தனம் பூசப்பட்டது.

இதில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டபல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை ஒன்றி யத்துக்கு உட்பட்ட அனைத்து டாஸ்மார்க்களுக்கும் நேற்று அடைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் திருவாரூர் மாவட்ட போலீசார் சிறப்பாக ஈடுபட்டுள்ளனர்.

விழாவையொட்டி, வருகிற 8-ந் தேதி இரவு மகரிபு தொழுகைக்கு பின் புனித திருக்குர்ஆன் ஷரீஃப் ஓதி துவா செய்து இரவு புனித கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் (அன்னதானம்) வழங்கப்படும்.

Tags:    

Similar News