உள்ளூர் செய்திகள்

கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம்

Published On 2022-11-17 09:08 GMT   |   Update On 2022-11-17 09:08 GMT
  • கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
  • ஏக்கருக்கு ரூ.10,000/- என்ற மானியத் தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம்கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம்சேலம்:

கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டிற்கான புதிய அறிப்பில் கால்ந டைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ரூ.1.00 கோடி செலவில் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 900 ஆதி திராவிடர் மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 லட்சம் மானியமும், 100 பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம் மானியமும் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது உறுப்பினராக சேர வேண்டும். பயனாளிக்கு விதைத் தொகுப்பு, புல் கறணைகளுடன் அத்தீவனங்களை வளர்க்கத் தேவையான பயிற்சி, கையேடு மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றின் செலவினங்கள் உள்ளிட்டவை ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000/- என்ற மானியத் தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, எருமாபாளையம் சாலை, சீலநாயக்கன்பட்டி, சேலம் என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News