தஞ்சை அரசு பள்ளியில் விழிப்புணர்வு ஓவிய போட்டி
- பல்வேறு போக்குவரத்து காவல்துறை சம்பந்தமான ஓவியங்களை வரைந்தனர்.
- சிறந்த ஓவியம் வரைந்திருந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
அரசு பள்ளிகளில் சாலை போக்குவரத்து போலீஸ் துறை உள்பட பல்வேறு துறைகள் சார்ந்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி தஞ்சை மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று சாலை போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் 60 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு போக்குவரத்து சிக்னல், ஒருவழி சாலை, வேகத்தடை, வாகனம் நிறுத்த அனுமதி இல்லை , போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதி என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து காவல்துறை சம்பந்தமான ஓவியங்களை வரைந்தனர்.
இந்த ஓவிய போட்டியை தஞ்சை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பார்வையிட்டார்.
பின்னர் சிறந்த ஓவியம் வரைந்திருந்த மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழங்கி பாராட்டினார்.
மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சங்கர், போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் , ஓவிய ஆசிரியர் அறிவுச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.