உள்ளூர் செய்திகள்

வன்கொடுமை தடுப்பு சட்டத்தீன் கீழ் அய்யாக்கண்ணு மீது வழக்கு

Published On 2022-10-01 10:16 GMT   |   Update On 2022-10-01 10:16 GMT
  • திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
  • பின்னர் இரு தரப்பினரையும் அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

திருச்சி :

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் மண்ணச்சநல்லூரை சேர்ந்த மாவட்ட விவசாய சங்க பெண்கள் பிரிவு தலைவர் கௌசல்யா மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக் கண்ணு இடையே தகராறு ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

பின்னர் இரு தரப்பினரையும் அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கவுசல்யா செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகார் பேரில் போலீசார் அய்யாக்கண்ணு மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News