அங்கன்வாடி மைய கட்டிட பணியை நிறுத்தி போராட்டம் குடியிருக்க மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்
- சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 50 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டிக் குடியிருந்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் புதிய கட்டி டம் கட்டுவதால் இவர்கள் குடியிருக்கும் இடம் இல்லாமல் இருப்பதாகவும் தங்களுக்கு அதே பகுதியில் உள்ள மீதமுள்ள நிலத்தில் பட்டா வழங்க வேண்டும்.
- அல்லது வேறு இடத்தில் பட்டா வழங்கிவிட்டு தற்போது கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து கட்டிட பணியை தடுத்து ஜெ.சி.பி. எந்திரத்தை திருப்பி அனுப்பினர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி யில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டதால் அது அகற்றிவிட்டு புதியதாக கட்டுவதற்காக சுமார் ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டது.
தற்போது அந்த இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கிட்டு என்பவர் தனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். மேலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டுவின் தந்தை முத்து என்பவருக்கு ராணுவத்தில் பணிபுரிந்த போது அரசு ராணுவ வீரர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் என கூறப்படுகிறது. அரசு ஆவ ணங்களில் இது புறம்போக்கு நிலம் என உள்ளது.
மேலும் அதே பகுதியில் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டிக் குடியிருந்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் புதிய கட்டி டம் கட்டுவதால் இவர்கள் குடியிருக்கும் இடம் இல்லாமல் இருப்பதாகவும் தங்களுக்கு அதே பகுதியில் உள்ள மீதமுள்ள நிலத்தில் பட்டா வழங்க வேண்டும் அல்லது வேறு இடத்தில் பட்டா வழங்கிவிட்டு தற்போது கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து கட்டிட பணியை தடுத்து ஜெ.சி.பி. எந்திரத்தை திருப்பி அனுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒன்றிய கவுன்சிலர் செல்வி ராஜா பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீடு இழப்பவர்களுக்கு புதிய இடத்தில் அரசு பட்டா வழங்க வேண்டும் என்றார். இதனால் காமலாபுரம் பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது.