உள்ளூர் செய்திகள்

மின்மினி செயலி மற்றும் போத்தீஸ் இணைந்து நடத்தும் `உலக சேலை தின' சிறப்பு போட்டி

Published On 2024-12-12 08:11 GMT   |   Update On 2024-12-12 08:11 GMT
  • வருகிற 21-ந்தேதி உலக சேலை தினம்.
  • வெற்றியாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் வழங்கப்படும்.

சென்னை:

மின்மினி செயலி மற்றும் போத்தீஸ் இணைந்து உலக சேலை தின சிறப்பு போட்டியை நடத்துகிறது.

நம் பண்பாட்டின் அடையாளமாகவும், பெண்களின் வாழ்வின் அங்கமாகவும் விளங்குவது சேலை. ஆடை வகை என்பதையும் தாண்டி நேர்த்தியான உழைப்புக்கும், கலை நயத்திற்கும் எடுத்துக்காட்டாக இருப்பது சேலை.

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த உடையாகிய சேலையை கவுரவிக்கும் விதமாக வருகிற 21-ந்தேதி 'உலக சேலை தினம்' கொண்டாடப்பட இருக்கிறது.


இந்த சேலை தினத்தை முன்னிட்டு ஆடை ரகங்களின் தன்னிகரற்ற அடையாளமான போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் போத்தீஸ் சேலை தினச் சிறப்பு 'ஹேஷ்டேக்' போட்டியை அறிவித்து உள்ளார்கள்.

இந்த போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். போட்டியில் பங்கேற்க விருப்பும் பெண்கள் சேலை அணிந்துகொண்டு அதை புகைப்படமாகவோ அல்லது சுவாரசியமான ரீல்ஸ்களாவோ எடுத்து அதை அவர்களது சொந்த இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட வேண்டும்.

அப்படி பதிவிடும்போது தவறாமல் ஹேஷ்டேக் போத்தீஸ் சேலை தினம் அதாவது #PothysSareeDay என்பதை இணைத்து பதிவிட வேண்டும். மேலும் அவர்களது புகைப்படம் மற்றும் ரீல்ஸ்களை பதிவிடும் போது மறக்காமல் போத்தீஸ் மற்றும் மின்மினி செயலியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை 'டேக்' செய்ய வேண்டும்.

போட்டியில் கலந்துகொள்ள நினைக்கும் பெண்கள் வருகிற 17-ந்தேதிக்குள் தங்களது பதிவுகளை மேலே குறிப்பிட்ட விதத்தில் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட வேண்டும்.


நம் பண்பாட்டின் மேன்மையை வெளிப்படுத்தும் சேலையைக் கொண்டாடும் விதமாக போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு அட்டகாசமான போட்டோ மற்றும் சுவாரசியமான ரீல்ஸ்களை பதிவிடும் பெண் போட்டியாளர்களின் சிறப்பான பதிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் வழங்கப்படும்.

வெற்றியாளர்களின் தேர்வு நடுவர் குழு மற்றும் நிர்வாகத்தின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும். மேலும் விவரங்களுக்கு 85915 85915 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News