இந்தியா

சீலா தோரணம் மலை பாதையில் பாறை மீது ஓய்வெடுத்த சிறுத்தையை படத்தில் காணலாம்.

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்- பக்தர்களுக்கு எச்சரிக்கை

Published On 2025-01-31 10:08 IST   |   Update On 2025-01-31 10:08:00 IST
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 51,349 பேர் தரிசனம் செய்தனர்.
  • ரூ.3.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீலா தோரணம் மலை பாதையில் உள்ள பாறையில் சிறுத்தை ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தது.

அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் சிறுத்தையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் திருப்பதி மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 51,349 பேர் தரிசனம் செய்தனர்.14,082 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

ரூ.3.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News