பாரிஸ் ஒலிம்பிக் 2024

ஒலிம்பிக்கில் 9 தங்கம் வென்ற அமெரிக்க நீச்சல் வீராங்கனை

Published On 2024-08-04 06:18 GMT   |   Update On 2024-08-04 06:18 GMT
  • லெடெக்கி 2012 ஒலிம்பிக்கில் இருந்து பங்கேற்று வருகிறார்.
  • ஒட்டு மொத்தமாக 14 பதக்கம் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் நள்ளிரவில் நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடெக்கி 8 நிமிடம் 11.04 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இந்த ஒலிம்பிக்கில் அவர் பெற்ற 2-வது தங்கமாகும். ஒட்டு மொத்தமாக ஒலிம்பிக்கில் அவர் 9 தங்கம் வென்று முத்திரை பதித்துள்ளார்.

இதன் மூலம் லாரிசா (சோவியத் யூனியன், ஜிம்னாஸ்டிக்), பாவோ நூர்மி (பின்லாந்து, தடகளம்), மார்க் பிஸ் (அமெரிக்கா, நீச்சல்), கார்ல் லீவிஸ் (அமெரிக்கா, தடகளம்), டிரெசல் (அமெரிக்கா, நீச்சல்) ஆகியோருடன் லெடெக்கி இணைந்தார். இவர்கள் 9 தங்கம் வென்று இருந்தனர்.

லெடெக்கி 2012 ஒலிம்பிக்கில் இருந்து பங்கேற்று வருகிறார். அவர் ஒட்டு மொத்தமாக 14 பதக்கம் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறார்.

Tags:    

Similar News